கூட்டுறவு வார விழா துவக்கம்
15 Nov 2025, 4:09 pm
<p><strong>கூட்டுறவு வார விழா துவக்கம் </strong></p>
<p> உதகை, நவ.15- 72 ஆவது கூட்டுறவு விழா, முப்பெரும் விழாவுடன் வெள்ளியன்று துவங்கியது. ‘தன்னிறைவுக்கான கருவிகளாக கூட்டுறவு சங்கங் கள்’ என்பதை மையக் கருத்தாக கொண்டு நவ.14 முதல் 20 ஆம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட உள் ளது. கூட்டுறவு வார விழாவின் முதல் நாளான வெள்ளி யன்று மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத் தார். இதன்பின் பிங்கர்போஸ்ட் பகுதியிலுள்ள மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் மண்டல இணைப்பதிவாளர் தே. சித்ரா தலைமையில் கூட்டுறவு கொடியேற்றி, உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நீலகிரி கூட்டுறவு விற் பனைச் சங்கம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கூட்டுறவு கொடி யேற்றப்பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கான இறகு பந்து, சது ரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டி களை உதகை அண்ணா உள் விளையாட்டு அரங்கத் தில் மண்டல இணைப்பதிவாளர் துவங்கி வைத்தார். ஆண்களுக்கான கிரிக்கெட் மற்றும் வாலிபால் போட்டி யானது எப்பநாடு பகுதியில் உள்ள மைதானத்தில் நடை பெற்றது.</p>
