தனியார் தொழிற்சாலைகளின் நடவடிக்கையால் திணறும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள்!
17 Dec 2025, 4:11 pm
<p><strong>தனியார் தொழிற்சாலைகளின் நடவடிக்கையால் திணறும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள்!</strong></p>
<p>தனியார் தேயிலை தொழிற் சாலை நிர்வாகத்தினர், பசுந் தேயிலை வாரத்தை காரணம் காட்டி கிலோவுக்கு கூடுதல் விலை அறி விப்பால், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை களில் 25 ஆயிரம் பேர் அங்கத்தினர்க ளாக உள்ளனர். குறைந்தபட்ச ஆதார விலை பசுந்தேயிலை கிலோ விற்கு 40 ரூபாய் நிர்ணயிக்க வேண் டும் என சிறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை கடந்த பல ஆண்டுகளாக ஒன்றிய, மாநில அரசு கள் நிறைவேற்றவில்லை.தேயிலை வாரியம் அறிவிக்கும் விலையை கூட்டுறவு தொழிற் சாலை நிர்வாகம் முறையாக வழங் கப்படாமல் மறுத்து வந்தாலும், தேயிலை ஏலங்களில் இடைத்தரகர் கள் சிண்டிகேட் அமைத்து, பணம் சம்பாதித்து விவசாயிகளை ஏமாற் றினாலும், தேயிலைக்கான ஆதார விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப் பில் சிறு விவசாயிகள் இத்தொழி லையே நம்பி பொருளாதார நெருக் கடியில் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், சிறு விவசாயிகள் கூட்டு றவு தேயிலை தொழிற்சாலைகளை தாய் வீடாக கருதி, தங்களது தேயி லைத் தோட்டத்தில் அறுவடை செய் யும் பசுந்தேயிலை முழுவதையும் அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். நீலகிரியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் துவங்கும் உறை பனி, ஜனவரி மாதம் வரை நீடிக்கும். இந்த சமயங்களில் தேயிலை வரத்து படிப்படியாக குறையும். கடந்த நான்கு நாட்களாக மாவட்ட முழுவதும் உறைபனி தென்பட்டுள் ளது. தேயிலை செடிகள் கருகி வரு வதால், தேயிலை வரத்து அடி யோடு குறைந்துள்ளது. அதே போல், வட மாநிலங்களிலும் அசா தாரண கால நிலையால் தேயிலை வரத்து குறைந்துள்ளது. இதனால், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரக தேயிலை தூள்களுக் கும் சந்தையில் கிராக்கி ஏற்பட்டுள் ளது. இதை சாதகமாக்கிக் கொள் ளும் தனியார் தேயிலை தொழிற் சாலைகள் சிறு விவசாயிகளிடமி ருந்து இலைகளை கொள்முதல் செய்யும் நோக்கில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்ணயிக் கும் விலையை விட கிலோவுக்கு கூடுதலாக, 2 ரூபாய் தருவதாக அறி வித்து, இலைகளை கொள்முதல் செய்கின்றன. இதனால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு இலை வரத்து படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. பனிப் பொழிவுக்கு முன்பு நாளொன் றுக்கு, 15 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலை யில், தற்போது அதிகபட்சம் 5 ஆயி ரம் கிலோ வரை கொள்முதல் செய் யப்படுகிறது. தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் அறிவிப்பால் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் இலை வரத்து குறைந்து வருவதால் தேயிலை உற்பத்தியில் திணறி வருகிறது. இதுகுறித்து தேயிலை விவசாயி கள் கூறுகையில், தேயிலைத் தொழிலை நம்பியுள்ள சிறு விவசா யிகள், போதிய விலை கிடைக்கா மல் கடந்த பல ஆண்டுகளாக பொரு ளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவது அனைவரும் அறிந்தது தான். தேர்தல் சமயத்தில் மட்டும் அரசியல்வாதிகள் பல்வேறு கார ணங்களை கூறி மூளை சலவை செய்து ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்ற பின், தேயிலை பிரச்சனை குறித்து காது கொடுத்து கேட்ப தில்லை. தற்போதைய நிலையில் கூட்டுறவு தொழிற்சாலையை விட கூடுதலாக விலை தரும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை சிறு விவசாயிகள் நாடி செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது அறிவித்துள்ள கூடுதல் விலையை கருத்தில் கொண்டு இலைகளை அங்கேயே விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, என்றனர். -ஜெ.ஷேக் அமீன்</p>
