தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்த அலுவலரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

12 Jan 2026, 6:02 pm
தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்த அலுவலரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து  கூட்டுறவு சங்க ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
<p><strong>தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்த அலுவலரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து &nbsp;கூட்டுறவு சங்க ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>தூத்துக்குடி, ஜன.12- &nbsp;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டு றவுத்துறை அலுவலர்களில் அலுவலக உத வியாளர் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழி யர்களை அரசாணைக்கு &nbsp;(எண் 10. பணியா ளர் நிர்வாக சீர்த்திருத்த துறை நாள் 07.01.1994) முரணாக பணியா1ளர்களிடம் எந்த விருப்பமும் இன்றி அரசியல் பின் புலத்துடன் பணியிடமாறுதல் வழங்கப் பட்டுள்ளது. &nbsp;தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தவறு செய்த சங்கப்பணியாளர் மீது தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற் பனை பண்டகசாலை கூட்டுறவு சார்பதிவாளர்/ செயலாட்சியர் எடுத்துள்ள ஒழுங்கு நடவ டிக்கையினை நீர்த்துப்போகச்செய்யும் வகை யில், துறை அலுவலரை இடமாற்றம் செய்வது தவறுக்கு துணைபோவது போன்று உள்ளது. எனவே, இப்பணியிடமாற்ற ஆணையினை இரத்து செய்ய வேண்டும். 3 ஆண்டு பணி முடித்த அலுவலர்களுக்கு எந்தவித அரசியல் நிர்ப்பந்தமும் இன்றி கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் ஆணை வழங்கி தொழில் அமைதி காத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் கலாவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெ. வளன் மைக்கேல் தளபதி தலைமை &nbsp;வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வக்குமார் &nbsp;கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் பிரபாவதி, மாநில துணைத் தலைவர் சாம் டேனியல் ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் &nbsp;ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.