தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்

8 Jun 2026, 11:25 pm
கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்
<p><strong>கூட்டுறவு சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்</strong></p><p>மதுரை, ஜூன் 8- தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் உள்ள மூட்டா அரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் த.பன்னீர்செல்வம் தலைமையில் நடை பெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் குழுத் தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் சிஐடியு மாநில உதவிப் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார், சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் மு.துரைச்சாமி, மாநிலச் செயல் தலைவர் பி.கௌத மன், மாநிலப் பொருளாளர் ஆ.சிவக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கூட்டுறவுத் துறையில் ஜனநாயக நடைமுறைகளை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் குழுத் தேர்தலை உடனடி யாக நடத்த வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வுகால நிதிப் பலன் கள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நடை முறைகள் கைவிடப்பட வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ள ஒருங்கி ணைந்த வளத் திட்டமிடல் மென்பொரு ளின் நம்பகத்தன்மையை முழுமை யாக உறுதி செய்யாமல் அதனை கட்டா யப்படுத்தக் கூடாது. நியாயவிலைக் கடைப் பணியாளர் களை 12 மணி நேரம் பணியாற்ற வற்புறுத்துவதை நிறுத்த வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலைக்குரிய 3 சதவீத ஊதிய உயர்வை முழுமையாக வழங்க வேண்டும். காலியாக உள்ள எடையாளர் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை தரமான பாக்கெட் முறையில் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழக அரசின் கவனத்திற்கு விரிவான மனு அனுப்பப்பட்டுள்ளதாக மாநிலப் பொதுச்செயலாளர் மு.துரை ச்சாமி தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.