கூட்டுறவுத்துறை சார்பில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை!
30 Oct 2026, 11:53 pm

கூட்டுறவுத்துறை சார்பில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை!

தருமபுரி, அக்.30-கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.200க்கு, 10 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனையை தருமபுரி ஆட்சியர்வே.சரவணன் வெள்ளியன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் அரிசி, பருப்பு வகைகள் மற்றும்மளிகைப் பொருட்களின் சந்தை விலை உயர்விலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில், கூட்டுறவு பண்டக சாலைகளின் மூலம் 201 விற்பனைநிலையங்கள் அமைக்கப்பட்டு, 6 வகையான நுகர்பொருட்கள் அரசு நிர்ணயித்த விலையில் தரமாகவும் சரியான எடையிலும் தொடர்ந்து தடையின்றி நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, வெள்ளியன்று தருமபுரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நடத்தும்சுயசேவைப் பிரிவு, தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலும், அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனை சங்கம் நடத்தும் சுயசேவைப் பிரிவிலும்

துவக்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் அன்றாடம்பயன்படுத்தும் சிறப்பு மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தலாம் என ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கு.த.சரவணன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை துணைப்பதிவாளர் வெ.கோப்பெருந்தேவி,கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.