கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
6 Aug 2026, 12:37 am

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மண்டல வேல்முருகன் கூட்டுறவு சார்பதிவாளருக்கு இயற்கை நியதிக்கு முரணாக வழங்கப்பட்டதற்காலிக பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மேலும் பதிவாளரின் ஊழியர் விரோதபோக்குகளையும் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அவர்களின் தன்னிச்சையான மற்றும் தவறானஅணுகுமுறையையும் கண்டித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்புஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுரின்விஜய்தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மகேந்திரபாபு, அரசு ஊழியர் சங்க மாவட்டதலைவர் விக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவு செய்து நில அளவை ஒன்றிப்புமாநில செயலாளர் பேபி பேசினார்.