தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

10 Feb 2026, 4:50 pm
சென்னை விரைவு செய்திகள்

கூட்டுறவு வங்கி பணியிடங்கள் குறைப்பு

சென்னை, பிப்.10- நிர்வாக காரணங்க ளுக்காக கூட்டுறவு வங்கி காலிப்பணியிடங்கள் குறைக்கப்படுவதாக மாநில ஆள்சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது. தமிழக கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணி யிடங்களுக்கு ஏற்கனவே 327 இடங்கள் அறிவிக்கப்  பட்டிருந்தன. தற்போது நிர்வாகக் காரணங்களுக் காக இந்த எண்ணிக்கை 267 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.

பிப். 14-இல் அமித் ஷா தமிழகம் வருகை

சென்னை, பிப். 10 - சேலத்தில் நடைபெறும் பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்பதாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் பிப்ரவரி 14 அன்று தமிழகம் வருகை தருவ தாகவும், அன்று மாலை யில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. மேலும், அமித் ஷா காரைக்காலுக்கும் செல்ல விருக்கிறார்.

ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிய கேத்லேப் கருவி

சென்னை, பிப். 10 - சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் ரூ. 8 கோடி மதிப்பிலான இரண்டாவது புதிய கேத்லேப் கருவி செவ்வாயன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த கருவியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். கேத்லேப் மூலம் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக அடைப்புகளை அகற்றி ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். அறுவை சிகிச்சை இல்லாமல் இதய நாள அடைப்புகளை நீக்கவும், பேஸ்மேக்கர் மற்றும் ICD பொருத்தவும் இந்த கருவி பயன்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. ஓமந்தூரார் மருத்துவமனையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு தினமும் 500 பேர் மட்டுமே புற மருத்துவ பயனாளிகளாக வந்த நிலை மாறி, தற்போது தினமும் 2,500 பேர் வரை வருகின்றனர். மாதம் சுமார் 15,000 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 25 பெரிய அறுவை சிகிச்சைகளும், 15 சிறிய அறுவை சிகிச்சைகளும் நடைபெறுகின்றன. எனவே, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தையும் ரூ. 34.60 கோடி மதிப்பீட்டில் முதல்வர் திறந்து வைத்துள்ளார். மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஓமந்தூ ரார் மருத்துவமனையில் கேத்லேப் அமைக்கப்பட்டுள்ள தாகவும், ஏற்கெனவே கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, பெரியார் அரசு மருத்துவமனை, சேலம் மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் கேத்லேப் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் புதிய கேத்லேப் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நிறைவு பிப். 17 இறுதிப் பட்டியல்

சென்னை, பிப். 10 - தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் பிப்ரவரி 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 17 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கடந்த அக்டோபர் 27 நிலவரப்படி தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதில், இறந்தவர்கள் தவிர, ஏனைய விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் ஜனவரி 18 வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பிப்ரவரி 10 வரை மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதனடிப்படையில், பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேருமாக மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம் பேரும், நீக்கம் கோரி 15 ஆயிரத்து 935 பேர்களும், திருத்தம் கோரி 4.38 லட்சம் பேர்களுமாக மொத்தம் 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரிபார்க்கும் பணி பிப்ரவரி 10-ஆம் தேதி உடன் முடிவடைந்தது. தற்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.