தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முறையற்ற கடன் வசூல்: பெண் தற்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை

21 Jun 2026, 2:22 am
முறையற்ற கடன் வசூல்: பெண் தற்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை
<p><strong>முறையற்ற கடன் வசூல்: பெண் தற்கொலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை</strong></p><p>உதகை, ஜூன் 20- குன்னூரில் முறையற்ற முறை யில் கடன் வசூல் செய்ததால், பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பகு தியை சேர்ந்தவர் முரளி. இவரின் மனைவி கார்த்திகா, ஸ்டேட் பேங் கில் தனிநபர் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், முறையற்ற முறை யில் கடனை வசூல் செய்ததால், மன உளைச்சலுக்குள்ளாகி கார்த் திகா தற்கொலை செய்தார். இந்நிலையில், உயிரிழந்த பெண் ணிற்கு நீதி கேட்டு, வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர், அப்பெண்ணின் உறவினர்க ளோடு ஸ்டேட் பேங்க் குன்னூர் கிளையை முற்றுகையிட்டனர். இதையடுத்து வங்கி நிர்வாகத்தினர் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த பெண்ணின் இரு மகள்களின் கல்வித் தேவைகளுக் காக இழப்பீடு வழங்கப்படும். முறையான பதில் அளிக்காததால் வங்கி அதிகாரி சுனில் குமார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக் கப்படும், என வங்கி நிர்வாகத்தி னர் எழுத்துப்பூர்வமாக உறுதிய ளித்தனர். முன்னதாக, இந்த பேச்சு வார்த்தையில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.வினோத், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.இளங்கோவன், மூத்த தோழர் ஜே.ஆல்துறை மற் றும் ரபீக், ரவி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.