குறைகளை தெரிவிக்க ‘கியூஆர் கோடு’
22 May 2026, 11:33 pm
<p><strong>குறைகளை தெரிவிக்க ‘கியூஆர் கோடு’</strong></p><p>உதகை, மே 22- குன்னூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கே.எம்.ராஜு, பொதுமக்கள் தங்கள் குறைகளை தங்களின் சொந்த கிரா மங்களில் இருந்து தெரிவிக்கும் வகையில் புதிய கியூஆர் கோடு வசதியை அறிமுகப் படுத்தினார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்த லில் திமுக சார்பில் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நீலகிரி மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜு, வாக்களித் தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். கோத்தகிரி ஒன்றியத்துக்குட்பட்ட மில்லிதேன், இந்திரா நகர், உல்லத்தட்டி, சுண்டட்டி போன்ற கிரா மங்களுக்கு நேரடியாக சென்று வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப் போது பொதுமக்கள் தங்களது குறைகளை தங்களது கிராமத்தில் இருந்தபடியே சட்ட மன்ற உறுப்பினருக்கு தெரிவிக்கும் வகை யில், ‘உங்களின் சட்டமன்ற உறுப்பினர்’ என்ற பெயரில் ஒவ்வொரு கிராமத்திலும் கியூஆர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வில் கீழ் கோத்தகிரி ஒன்றியச் செயலா ளர் பீமன், அவைத்தலைவர் போஜன், முன் னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
