தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விதிகளை மீறும் மினி பேருந்துகள்: பயணிகள் அச்சம்

17 Jun 2026, 12:20 am
விதிகளை மீறும் மினி பேருந்துகள்: பயணிகள் அச்சம்
<p><strong>விதிகளை மீறும் மினி பேருந்துகள்: பயணிகள் அச்சம்</strong></p><p>உதகை, ஜூன் 16- குன்னூர் பகுதியில் விதிகளை மீறி இயக் கப்படும் மினி பேருந்துகளால், பயணிகள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் பொதுமக்க ளின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதில், மினி பேருந்துகள் (சிற்றுந்துகள்) மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப் பாக, குன்னூர் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் தினசரி பயணத்திற்கு இந்த பேருந்துகளே பிரதானமாக உள்ளன. இந்நிலையில், குன் னூரில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படும் சில மினி பேருந்துகள், பய ணிகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் வகை யில் மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. அண்மைகாலமாக, குன்னூர் பகுதி யில் இயக்கப்படும் சில மினி பேருந்துகளில் அடுக்கடுக்கான விதிமீறல்கள் அரங்கேறி வருவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அனுபவம் இல்லாத சிறார்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுவது, வளைவுகள் நிறைந்த ஆபத்தான மலைப் பாதைகளில், ஓட்டுநர்கள் மது போதையில் அதிவேகமாக பேருந்துகளை இயக்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. பணியின் போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமங்கள் இல் லாமலும், முறையான சீருடை அணியாம லும் பலர் பணியில் ஈடுபடுகின்றனர். பொது மக்களுக்கு பெரும் இடையூறு விளைவிக் கும் வகையில் தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், பேருந்தின் உள்ளே காதை செவி டாக்கும் அளவிற்கு சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்து இயக்குவதோடு, பயணி களிடம் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மரி யாதை குறைவாகவும், ஒருமையில் பேசுவ தாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வண்டிச் சோலை வழித்தடத்தில் தனியார் மகளிர் கல் லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய சில மினி பேருந்துகளின் ஓட்டுநர்களும், நடத்துநர்க ளும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகை யில் கிண்டல் செய்தும், ஆபாச வார்த்தை களை பயன்படுத்தியும் வருவதாக தெரிகி றது. இந்த அநாகரிகமான சம்பவங்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணி கள் மத்தியில் முகம் சுழிப்பையும், பாதுகாப் பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.