தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்திற்கு தடை: காய்கறிகள் விலை உயர்வால் மக்கள் அவதி!

30 Oct 2026, 12:28 am
போக்குவரத்திற்கு தடை: காய்கறிகள் விலை உயர்வால் மக்கள் அவதி!

போக்குவரத்திற்கு தடை: காய்கறிகள் விலை உயர்வால் மக்கள் அவதி!

உதகை, அக்.29-மண் சரிவால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து தடை காரணமாக, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அத்தியாவசிய காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த பரவலான கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குன்னூர் தினசரி சந்தைக்கு வரும் உள்ளூர் காய்கறிகளின் வரத்து பாதியாக குறைந்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம்போன்ற

பகுதிகளிலும் மழை பாதிப்பால் உற்பத்தி சரிந்துள்ளது. இதன் காரணமாக வெளிச்சந்தைகளில் இருந்து குன்னூருக்கு வரும் காய்கறி லாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழைக்கால சாலை பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து தடங்கல்கள் காரணமாக, காய்கறிகளை கொண்டு வருவதற்கான லாரி வாடகை மற்றும் இதர போக்குவரத்து செலவுகள் உயர்ந்துள்ளன. இதுவும் சில்லறை விற்

பனை விலை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது மண் சரிவால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே,வாகனங்கள்கோத்தகிரி வழியாக சுற்றி செல்கின்றன. இதனால் ஒரு கட்டு மல்லி ரூ.60-க்கும், வெள்ளைப்பூண்டு கிலோ ரூ.250-க்கும், முள்ளங்கி கிலோ ரூ.90-க்கும், தக்காளி கிலோ ரூ.45க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மலைப்பாதைகளில் போக்குவரத்து முழுமையாக சீராகி, வெளிமாநில வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருதி, உழவர் சந்தைகளில் கூடுதல் காய்கறிகளை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.