முந்தய பக்கம்

குன்னூரில் மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்

22 May 2026, 11:43 pm
குன்னூரில் மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்

குன்னூரில் மலைப்பயிர்கள் கண்காட்சி துவக்கம்

உதகை, மே 22- குன்னூர் காட்டேரி பூங்காவில் 2 ஆவது மலைப்பயிர்கள் கண்காட்சி வெள்ளியன்று உற்சாகமாக துவங்கியது. நீலகிரி மாவட்டம், குன்னூர் - மேட்டுப் பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவில் இரண்டா வது ஆண்டாக தோட்டக்கலைத்துறை சார் பில், மலைப் பயிர்கள் கண்காட்சி வெள்ளி யன்று துவங்கியது. இக்கண்காட்சி மே 24 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள் ளது. இங்கு நுங்கு, இளநீர், பாக்கு ஆகிய வற்றை கொண்டு பிரம்மாண்டமான மீன் பிடிக்கும் படகு, தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கலங்கரை விளக்கம், நுழைவு வாயில்கள், அரங்கு களில் விவசாயிகள் கொண்டு வரும் தேயிலை, காபி உட்பட பல்வேறு பொருட் கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram