சம்பளக் குறைப்பு - மருத்துவமனை தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!
9 Aug 2026, 12:50 am
<p><strong>சம்பளக் குறைப்பு - மருத்துவமனை தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!</strong></p><p>உதகை, ஆக. 8-குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் ரூ.6,000 குறைவாக வழங்கப்படுவதை கண்டித்து, சனியன்று மருத்துவ ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p><p>சிஐடியு நீலகிரி மாவட்டச் செயலாளர் வினோத் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தற்காலிகப்பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களைஎழுப்பினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.இதனையடுத்து, தகவலறிந்து வந்த குன்னூர் வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்ஆகியோர்,போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரியநடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியைஏற்றுக்கொண்ட ஊழியர்கள், தங்களின் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.</p>
