மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்
19 Jun 2026, 12:10 am
<p><strong>மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம்</strong></p><p>உதகை, ஜூன் 18- முறையாக மாத ஊதியம் வழங்க வேண்டும் என வலியு றுத்தி குன்னூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழி யர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்களுக்கு, மாத சம்பளமாக ரூ.18 ஆயிரத்து 648 வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், தனியார் ஒப்பந்த நிறுவனம் ரூ.11 ஆயிரத்து 626 மட்டுமே சம்பளத்தை வழங்கியுள்ளது. மேலும், கடந்த மாதம் ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்கி உள்ளது. அரசு நிர்ணயித்த மாத சம்பளத்தை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று மருத்துவமனை நுழைவாயிலில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.</p>
