குன்னூரில் 66 ஆவது பழக் கண்காட்சி துவக்கம்
27 May 2026, 11:35 pm

குன்னூரில் 66 ஆவது பழக் கண்காட்சி துவக்கம்

உதகை, மே 27 – நீலகிரி மாவட்ட கோடை விழாவின் இறுதி மற்றும் முக்கிய சிறப்பம்சமான குன்னூர் சிம்ஸ் பூங்காவின் 66 ஆவது பழக் கண்காட்சி புதனன்று கோலாகலமாக துவங்கியது.

சுற்றுலாப் பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தி யில் துவங்கியுள்ள இக்கண்காட்சி, வரும் மே 30-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு கண்காட்சியின் அசாத்திய முகப்பாக, பல டன் எடையுள்ள விதவிதமான பழங்களைக் கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ’டைனோசர்’ உருவம் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

அத்துடன், பழங்களால் ஆன டைனோசர் முட்டைகள் மற்றும் சிறிய ரக டைனோசர்களின் வடிவங்களும் தத்ரூபமாக செதுக்கப் பட்டு, சிம்ஸ் பூங்காவை ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலத்து உலகமாக மாற்றிக் காட்டியுள்ளன.

பழக் கண்காட்சியை காண வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இரட்டிப்பு விருந் தளிக்கும் வகையில், சிம்ஸ் பூங்கா முழுவதும் தற்போது லட் சக்கணக்கான வண்ணமயமான கோடைக்கால மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

பசுமையான புல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த மலர்ச் செடிகளும், பழச் சிற்பங்க ளும் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் கண் களுக்குப் பெருவிருந்தாக அமைந்துள்ளன.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந் தும், பிற மாநிலங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்ட பல டன் எடையுள்ள அரிய வகை பழங்கள் மற்றும் நீலகிரி மலைக்கே உரிய பிரத்யேகப் பழங்கள் இக்கண்காட்சியில் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ப

ழங்களின் நன்மைகள் மற்றும் அவற்றின் மருத்துவக் குணங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகளும் இதில் இடம்பெற்றுள் ளன. நீ

லகிரி கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சி இது என்பதால், குன்னூர் மற்றும் உதகை (ஊட்டி) பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் ஊட்டி செல்லும் மலைச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க மாவட்டக் காவல் துறை சார்பில் சிறப்பு போக்குவரத்துப் பிரிவுகள் உருவாக்கப் பட்டு, கூடுதல் காவலர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.