ஒன்றிய பாஜக அரசின் அலட்சியத்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
15 Mar 2026, 4:11 pm
<p><strong>ஒன்றிய பாஜக அரசின் அலட்சியத்தால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு: திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு</strong></p>
<p>புதுக்கோட்டை, மார்ச் 15- ஒன்றிய அரசின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டப்பாடு மற்றும் தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் மறுக்கப்படுவதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைச்சரும், திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான எஸ். ரகுபதி தலைமை வகித்தார். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லப்பா ண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பெனட் அந்தோணிராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், முஸ்லீம் லீக் அஸ்ரப்அலி ஆகியோர் பேசினர். சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர் சுசீலா கணேசன், சிபிஐ சார்பில் ரெங்கராஜ், சுந்தர்ராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதியழகன், கி.ஜெயபாலன், கி.சலோமி, மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.அன்புமணவாளன், கே.முகமதலிஜின்னா, எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கந்தர்வகோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில், திமுக ஒன்றியச் செயலாளர் பரமசிவம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தச்சங்குறிச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் தமிழய்யா தலைமையில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கறம்பக்குடியில் முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் தலைமையில் திமுக ஒன்றியச் செயலாளர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவர் முருகேசன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் துரை.அரிபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டை, நாஞ்சூர், கீரனூர் ஆகிய இடங்களில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் சேட், சண்முகம், வெங்கடாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருவரங்குளம் ஒன்றியத்தில் ஆலங்குடி, கீரமங்கலம், வல்லத்திரா கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு திமுக ஒன்றியச் செயலாளர்கள் தங்கமணி, ரவி, வடிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல். வடிவேல், நகரச் செயலாளர் ஏ.ஆர். பாலசுப்பிரமணியன், மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விராலிமலையில் முன்னாள் ஊராட்சிக்குழு துணைத் தலைவர் த.சந்திரசேகரன் தலைமையில் திமுக ஒன்றியச் செயலாளர் போஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. சண்முகம், ஒன்றியச் செயலாளார் மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னவாசலில் திமுக ஒன்றியச் செயலாளர் சந்திரன் தலைமையில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெருமாநாட்டில் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் சிபிஎம் சார்பில் ஆர்.சி.ரெங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரிமளத்தில் ஒன்றியச் செயலாளர்கள் இளையராஜா, ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.வி. ராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுக்கோட்டை ஒன்றியம் செம்பாட்டூரில் திமுக ஒன்றியச் செயலாளர் சாமிநாதன் தலைமையில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா்டத்தில், மாநகர திமுக செயலாளர் மேயர் சண்.ராமநாதன் வரவேற்றார். மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய அரசின் இணை அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேந்திரன், தி.க. மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் அமர்சிங், தி.மு.க மாவட்ட பொருளாளர் அண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்டச் செயலாளர் இடிமுரசு இலக்கணன், தேமுதிக மாநகர மாவட்டச் செயலாளர் சிவநேசன்‌ மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேராவூரணி பேராவூரணி ரயிலடி அருகே சிலிண்டருக்கு மாலை அணிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் சிதம்பரம், சிபிஐ பா.பாலசுந்தரம் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். பூக்கொல்லை பூக்கொல்லை கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக எம்எல்ஏ நா அசோக்குமார் தலைமை வைத்தார். திமுக ஒன்றியச் செயலாளர் மு.கி. முத்துமாணிக்கம், மதிமுக பாலசுப்பிரமணியன், தேமுதிக வி.எஸ்.கே.பழனிவேல், சிபிஎம் வீ. கருப்பையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் அய்யாராசு தலைமை வகித்தார். இதில், பாபநாசம் வடக்கு ஒன்றியச் செயலாளர் தாமரைச்செல்வன், மாநில அயலக அணி துணை செயலாளர் விஜயன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். திருவாரூர் திருவாரூர் புதியரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே. கலைவாணன் தலைமையேற்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், சிபிஐ தொழிற்சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன், திராவிடர் கழகம் மாவட்டத் தலைவர் அருண்காந்தி, விசிக மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர். குடவாசல் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்து உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், திமுக ஒன்றியச் செயலாளர்கள், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி. லெனின், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், சிபிஐ ஒன்றியச் செயலாளர் டேவிட்ராஜ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை திமுக மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் தலைமை வகித்து உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகர பொறுப்பு செயலாளர் ஏ. ஆர்.விஜய், காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். செம்பனார்கோவிலில், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கண்டன உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி, செம்பனார்கோவில் ஒன்றியச் செயலாளர்கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் மு.ஞானவேலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கும்பகோணம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் க. அன்பழகன் தலைமை வகித்தார். உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன், திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் சு. கல்யாணம், கும்பகோணம் மாநகரச் செயலாளர் சுப.தமிழழகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் குமரன், தி.க மாநகர தலைவர் நிம்மதி, சிபிஎம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், சிபிஐ உறுப்பினர் பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மன்னார்குடி மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரக் குழுச் செயலாளர் ஜி. தாயுமானவன் தலைமை ஏற்றார். சிஐடியு தலைவர்கள் ஆ. அரிகரன், ஈ.டி. ஜெகதீசன் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ் கண்டன உரையாற்றினார். தலைவர் எம். சௌந்தரராஜன் நிறைவுரையாற்றினார்.</p>
