வீதிகள் தோறும் சமையல் எரிவாயு, பக்கோடா சுவரோவியங்கள்
2 Apr 2026, 5:30 am

வீதிகள் தோறும் சமையல் எரிவாயு, பக்கோடா சுவரோவியங்கள்

மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் சுவரோவியங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் சுவரோவியங்களில் எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

மிதா பாக் பகுதியில் உள்ள சுவரில், சாலையோரக் கடையில் பக்கோடா சுட்டு விற்கும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இது மோடி ஆட்சியில் நிலவும் வேலையில்லாமையைக் குறிக்கிறது. பிரதமர் மோடி முன்பு பட்டதாரி இளைஞர்களை பக்கோடா சுட்டு பிழைக்கச் சொன்னதை இது நினைவுபடுத்துகிறது.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை குறிக்கும் வகையில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதில் பிரதமர் மோடி சிலிண்டர் வண்டியை ஓட்ட, அமித் ஷா பின்னால் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.