வீதிகள் தோறும் சமையல் எரிவாயு, பக்கோடா சுவரோவியங்கள்
2 Apr 2026, 5:30 am

வீதிகள் தோறும் சமையல் எரிவாயு, பக்கோடா சுவரோவியங்கள்

மேற்கு வங்கத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் சுயேச்சையவர்கள் சமூக வலைதளங்களில் டிஜிட்டல் சுவர் ஓவியங்கள் வருகின்றது. குறிப்பாக பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் சுவரோவியங்களில் எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

வேலவாய்ப்பு இல்லை மிதா பாகு பகுதியில் உள்ள சுவரில், சாலையோரக் கடையில் கொதிக்கும் எண்ணெய்க்களில் பக்கோடா சுட்டு, அதனை பொட்டலம் கட்டி வாடிக்கையாளர்களுக்கு விற்கும் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இது மோடி ஆட்சியில் நிலவும் வேலையில்லாமையைக் குறிக்கிறது.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியில் சிலிண்டர் தட்டுப்பாடு, சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றை குறிக்கும் வகையிலும், மோடி மற்றும் அமித் ஷாவை பொது மக்கள் விரட்டும் வகையிலும் சுவரோவியம் வரையப்பட்டுள்ளன. இந்த சுவரோவியத்தில் சிலிண்டர் வண்டியை பிரதமர் மோடி ஓட்ட, அமித் ஷா பின்னால் உள்ளார்.

மற்றொரு வீட்டில் சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டதை அடுத்து, விறகு அடுப்பில் ரொட்டி சுட்டுக் கொடுக்கும் வகையில் சுவரோவியம் வரையப்பட்டுள்ளன. சுவரோவியங்கள் அனைத்தும் எந்த கட்சிகள் வரைந்தன என்பது தொடர்பான தகவல் இல்லை.