தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

13 Nov 2025, 3:30 pm
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

எப்படி?

பஞ்சாபில் பல்கலைக்கழக செனட் தேர்தல் சர்ச்சையையொட்டி பல பகுதி களைச் சேர்ந்த மக்கள் கிளர்ந்து எழுந்தனர். போராடுபவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதர வாக இந்திய மாணவர் சங்கம் நின்று போராடிக் கொண்டிருக்கிறது. அண்மைக்காலங்களில் நதிநீர்ப் பிரச்சனை, பக்ரா-பியாஸ் நிர்வாக வாரியம், விவசாயிகள் நெருக்கடி, மத ரீதியான அவமானப்படுத்தும் நிகழ்வுகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் உடனடியாக மக்கள் திரண்டு விடுகிறார்கள். எப்படி இது நடக்கிறது என்று சில ஊடகவியலாளர்கள் கூர்ந்து ஆய்வு செய்து பார்த்திருக்கிறார்கள். பொதுவாகப் பிரச்சனை எழும்போது மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் உணர்வுப் பூர்வமாகத் திரள்கிறார்கள். அதுதான் உடனடி யாகப் பிரச்சனைகள் வெளிவருகின்றன. பெருந்திரளாக இளைஞர்கள் கூடுவதால் பிரச்சனைகள் பெரிதாகவும் பேசப்படுகின்றன என்று அந்த ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள்.

ஏன்..?

திரிபுராவை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்று அறிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் மத்தியில் அதன் எழுத்தறிவு விகிதம் 95.6  விழுக்காடாக உள்ளது. 1961 ஆம் ஆண்டில் இந்த மாநிலத்தின் எழுத்தறிவு விகிதம் வெறும் 20.24 விழுக் காடுதான். எப்படி இந்த மாற்றம் என்ற கேள்வி எழுப்புபவர்களுக்கு 1977 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே விடையாகக் கிடைக்கிறது. 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடு ப்பில் 87.22 விழுக்காடாக எழுத்தறிவு உயர்ந்து சாதனை படைத்தது. அடுத்த ஐந்தாண்டுக் காலத்திலேயே தற்போது இவர்கள் சொல்லும் எழுத்தறிவு விகிதத்தை எட்டி விட்டார்கள். முழு எழுத்தறிவு பெற்ற மாநிலம்  என்று அறிவிப்பும் வெளியானது. பின்னர் ஏன் மீண்டும் அறிவிக்கிறார்கள்? வெறும் விளம்பர த்திற்காக பாஜக அரசு நாடகம் ஆடுகிறது என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.

எதற்கு?

குறைந்தபட்சத் தொகை இல்லை என்றால் அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. அவர்கள் அறிவித்துள்ள புதிய விதிமுறை நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அபராதம் விதிக்கிறார்களே என்று கணக்கு வைத்திருப்பவர்கள் குமுறியபோது ஒன்றிய அரசில் உள்ளவர்கள் அப்படியெல்லாம் இல்லை. புரளி கிளப்ப வேண்டாம் என்றெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ரிசர்வ் வங்கியின் புதிய விதி, அவர்கள் இவ்வளவு நாட்களாக சொல்லி வந்தது அப்பட்டமான பொய் என்று அம்பலமாகியுள்ளது. எந்தவிதத் தொகையும் இல்லாமல் கணக்கு திறக்கலாம் என்று சொல்லிக் கோடிக்கும் மேற்பட்ட கணக்கு களை இந்த அரசுதான் திறக்க வைத்தது. அப்படித் திறக்கப்பட்ட கணக்குகளின் மீதுதான் இந்த அபராதம் பெருமளவில் பாய்ந்தது. எதற்கு இவ்வளவு குழப்பங்களை ஏற்படுத்து கிறார்கள் என்று வங்கி வாடிக்கையாளர்கள் குமுறுகிறார்கள்.

எங்கே..?

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.