தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியஞ்சலி பணம் பெற்று கொண்டு மேடையில் ஆட அனுமதிக்கவில்லை என சர்ச்சை

17 Feb 2026, 3:36 pm
சிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியஞ்சலி  பணம் பெற்று கொண்டு மேடையில்  ஆட அனுமதிக்கவில்லை என சர்ச்சை
<p><strong>சிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியஞ்சலி &nbsp;பணம் பெற்று கொண்டு மேடையில் &nbsp;ஆட அனுமதிக்கவில்லை என சர்ச்சை</strong></p> <p>சிதம்பரம், பிப். 17- சிதம்பரம் நடராஜர் கோயில் வளா கத்தில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி விழாவில், வெளிநாட்டுப் பெண் கலை ஞர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மேடையில் ஆட அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள், சென்னையைச் சேர்ந்த ஒரு நாட்டியப் பள்ளி மூலமாக கோயில் தீட்சிதர் ஒரு வரிடம் அனுமதி கோரி 60 ஆயிரம் ரூபாய் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பி னும், விழாவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக, அவர்களுக்கு முக்கிய மேடையில் ஆட அனுமதி மறுக்கப்பட்டு, கோயிலின் தெற்கு கோபுரம் அருகே உள்ள பகுதியில் மட்டுமே ஆட வாய்ப்பு அளிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இது குறித்து தில்லை நாட்டியஞ்சலி அறக்கட்டளை நிர்வாகி ஐயப்பன் தீட்சிதர் விளக்கமளிக்கையில், &ldquo;இந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால் இதற்கும் அறக்கட்டளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நாங்கள் யாரிடமும் பணம் பெற வில்லை. கோயிலுடன் தொடர்புடைய ஒரு நபர் தனிப்பட்ட முறையில் பணம் பெற்ற தாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த புகார் கோயில் செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டியக் கலைஞர்கள் வருத்தமடையக் கூடாது என்பதற்காகவே அவர்களைத் தெற்கு கோபுரம் அருகே ஆட ஏற்பாடு செய்தோம்&rdquo; என்று தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 1981 முதல் 2014 வரை 33 ஆண்டுகள் நாட்டி யஞ்சலி அறக்கட்டளை சார்பில் விழாக்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு 2015 முதல் தீட்சிதர்கள் நிர்வாகப் பொறுப்பேற்று விழாவை நடத்தி வருகின்றனர். 2022-க்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த விழா, இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கால் மண்டபம் அருகே 7 நாட்கள் நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எழுந்துள்ள இந்தப் பண விவகாரம் மற்றும் பாரபட்சம் குறித்த புகார்கள் கலை ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.