தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

4 Feb 2026, 5:19 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

செயின் பறிப்பு: தனிப்படை அமைப்பு

நாமக்கல், பிப்.4- தலைமை காவலரின் மனைவியிடம் செயின் பறித்த குற்றவாளியை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத் துள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயபிர காஷ். இவர் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி  வருகிறார். இவரது மனைவி உமாராணி, தனது  குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற் காக செவ்வாயன்று மாலை ஓடப்பள்ளி கதவணைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக் கர வாகனத்தில், வந்த நபர் ஒருவர் திடீரென உமாராணி  அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில், பள்ளிபாளை யம் காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு காவ லர்கள் ஓடப்பள்ளி கிராமத்தில் உள்ள சிசிடிவி கண்கா ணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவா ளியை தேடி வருகின்றனர். மேலும், பள்ளிபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் கௌதமன் தலை மையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து வாகன விபத்து

சேலம், பிப்.4- சேலம் அருகே இருசக்கர வாகனம் அடுத்தடுத்து இரண்டு வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே சேலம் - திருச்செங்கோடு சாலையில் இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்த ஆண்டனி மற்றும் சங்கர் ஆகியோர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி  சென்றதால், அடுத்தடுத்து இரண்டு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் தலையில் பலத்த காயத்து டன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் அதிவேகமாக வாக னத்தை ஓட்டி வந்த ஆண்டனி மற்றும் சங்கர் திருச் செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,  திருத்தம் செய்ய 17,233 பேர் விண்ணப்பம்

உதகை, பிப்.4- நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உட்பட திருத்தம் செய்ய 17 ஆயி ரத்து 233 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு  தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப் பட்டது. இதைத்தொடர்ந்து கடந்தாண்டு டிச.19 ஆம்  தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 5 லட்சத்து 33 ஆயிரத்து 76 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இறந்த வாக்காளர்கள் உட்பட நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் பிற அரசு அலுவலகங்களில் பெயர் நீக்கத்திற்கான கார ணத்துடன் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டது. இப்பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் புதி தாக, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் முகவரி  மாற்றம் பெயர் திருத்தம் செய்வோர் விண்ணப்பிக்கும்  விதமாக கடந்த டிச.27 மற்றும் 28 மற்றும் ஜன.3 மற்றும்  4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட் டன. இதுகுறித்து ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவ லருமான லட்சுமி பவ்யா கூறுகையில், நீலகிரி மாவட் டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க 11 ஆயி ரத்து 353 பேர் விண்ணப்பித்துள்ளனர். வெளிநாடு வாழ்  இந்தியர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் மற்றும் ஆட்சேப னைகள் பதிவு செய்ய 1489 பேர், முகவரி மாற்றம் செய்ய  1742 பேர், திருத்தங்கள் மேற்கொள்ள 2331 பேர்,  புதிய வாக்காளர் அட்டை பெற 146 பேர், மாற்றுத்திற னாளிகள் என குறியீடு கோரி 158 பேர் என மொத் தம் 17 ஆயிரத்து 233 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட் டன. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17 ஆம் தேதி  வெளியிடப்படும், என்றார்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

உதகை, பிப்.4- கூடலூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளை ஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (26). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தை கள் உள்ளனர் என கூறப்படுகிறது. இவர் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஜீப் ஓட்டு நராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பள்ளிக்கு செல்வதற்காக ஜீப்பில் பயணம் செய்யும் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம், கடந்த சில மாதங்களாக பழ கியுள்ளார். இந்நிலையில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு வெளியூரிலுள்ள கோவி லுக்கு சென்று வரலாம் என சிறுமியை, கூடலூ ரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென் றுள்ளார். அப்போது சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை காட்டி, பாலியல் வன்கொ டுமை செய்துள்ளார். தனக்கு நடந்த இந்த  துயர சம்பவத்தை சிறுமி யாரிடமும் சொல்லா மல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு லேசான வயிறு வலி ஏற்பட்டுள் ளது. பெற்றோர்கள் விசாரித்த போது, நான்கு  மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என  சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து பெற் றோர், சிறுமியை அழைத்துக் கொண்டு மருத்துவரை அணுகிய போது, அவர் 4 மாதம்  கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இச்சம்ப வம் குறித்து கூடலூர் மகளிர் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டபோது, சிறுமி தனக்கு நடந் ததை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறு மியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டு நர் பிரதீப்பை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கனிம வளக்கொள்ளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை

கோவை, பிப்.4- கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில், கனிமவளத்துறை சார்பில், கனிமங்கள் கொண்டு செல்வதை 24  மணி நேரமும் கண்காணிக்கும் வகை யில், முக்கிய இடங்களில் நுண்ணறிவு திறன் (ஏஐ) கொண்ட 132 கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கும் கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.  கோவையில் சட்ட விரோதமாக கனிமம் வெட்டியெடுப்பது, கனிமம் கொண்டு செல்வது தொடர்பான புகார் களை 1800-233 3995 என்ற கட்டண மில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க வும் கட்டணமில்லா அலைபேசி வசதி கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. மொபைல் செயலி, இணையதளமும் (KOVAI MINING SURVEILLANCE) உரு வாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள் ளது. இந்நிலையில், பேரூர் வட்டத்தில் உரிய அனுமதியின்றி கனிமம் வெட்டி யெடுத்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புரையின் அடிப்படை யில், ரூ.183 கோடி மதிப்பீட்டில் அனும தியில்லாமல் கனிமங்கள் கொண்டு செல்வதை, கண்காணிக்கும் வகையில் கே.ஜி.சாவடி, பெரியநாயக்கன்பாளை யம், பேரூர், ஆலாந்துறை, தொண்டா முத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் நுண்ணறிவுதிறன் கொண்ட 132 கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி  நேரமும் கண்காணிக்கும் கண்காணிப்பு அறையானது கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள் ளது. இந்த கண்காணிப்பு அறையில் கனிமவளத்துறை சார்பில் ஒரு ஊழிய ரும் காவல்துறை சார்பில் ஒரு போலீசா ரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுவர். இதற்காக உருவாக்கப் பட்டுள்ள கண்காணிப்பு செயலியில் தேவைக்கேற்ப வாகனங்களை வரிசை படுத்தி வாகனப்பதிவு எண்ணை எடுத்து வாகன உரிமையாளர்களின் விவரங்களை பெறலாம். மேலும் மாவட்ட, வருவாய் கோட் டாட்சியர், பொள்ளாச்சி சார் ஆட்சி யர், மற்றும் பேரூர் துணை காவல் காண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு  அலுவலகங்களிலும் கண்காணிப்பு அறைகள் நிறுவப்பட்டு கண்காணிக் கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த கண்காணிப்பு மையத்தை ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

பாலியல் வன்கொடுமைக்குள்ளான பள்ளி மாணவி: இளைஞர் கைது

உதகை, பிப்.4- கூடலூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த நாடுகாணி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (26). இவருக்கு திருமண மாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என கூறப் படுகிறது. இவர் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஜீப்  ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பள்ளிக்கு செல்வதற்காக ஜீப்பில் பயணம் செய்யும்  9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம், கடந்த சில மாதங்களாக பழகியுள்ளார். இந்நிலையில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு வெளியிலுள்ள கோவி லுக்கு சென்று வரலாம் என சிறுமி, கூடலூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு காட்டுப்பகு திக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியி டம் திருமண ஆசைவார்த்தை காட்டி, பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். தனக்கு நடந்த இந்த துயர சம்பவத்தை சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து  வந்துள்ளார். இந்நிலையில், சிறுமிக்கு லேசான வயிறு வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் விசாரித்த போது, நான்கு மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர், சிறு மியை அழைத்துக் கொண்டு மருத்துவரை அணுகிய போது, அவர் 4 மாதம் கர்ப்பமாக உள்ளது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து கூடலூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டபோது, சிறுமி தனக்கு நடந்ததை கூறி யுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த ஓட்டுநர் பிரதீப்பை போக்சோ சட் டத்தின்கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் ஹோட்டல் அறையில் பனியன் துணி வியாபாரி கொலை

திருப்பூர், பிப்.4– திருப்பூரில் பனியன் துணி வியாபாரி ஒருவர் புத னன்று ஹோட்டல் அறையில் கொலை செய்யப் பட்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கார்த்தி கேயன். ஓம்சக்தி கோயில் வீதியில் வசித்து வந்த இவர் பனியன் துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலை யில் இவரது உறவினரான கங்கைஅமரன் என்பவர் இவரை சொத்துப் பிரச்சனை தொடர்பாக பேச வேண் டும் எனச் சொல்லி, அவிநாசி சாலை பங்களா பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு வரச் சொல்லியுள்ளார்.  இதையடுத்து, கார்த்திகேயன் புதனன்று காலை அந்த விடுதிக்குச் சென்றிருக்கிறார். அங்குள்ள அறை யில் அவரது உறவினர் கங்கை அமரனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் கங்கை அம ரன் தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை  கொண்டு கார்த்திகேயனை தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விடுதி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருப்பூர் வடக்கு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கார்த்திகேயனின் உடலை மீட்டு அரசு மருத்துவம னைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  கார்த்திகேயனை கொலை செய்த கங்கை அமரனிடம் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தினர் ஐவர் கைது

திருப்பூர், பிப்.4- திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த ஐந்து பேரைக் காவலர்கள் கைது செய்தனர். திருப்பூர் மாநகரம் நல்லூர் பகுதியில் உள்ள பனி யன் நிறுவனங்களில் வங்க தேசத்தை சேர்ந்த வர்கள் வேலை செய்து வருவதாக நல்லூர் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்ப டையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சிறப்பு புல னாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் நல்லூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். இதில்  அங்கு வேலை செய்த எம்.டி.சைபுல் இஸ்லாம் (26),  ரஹத்துல்லா (28), மோரியம் (27), ஷாஹ்ரியாலம் (38), தோஹாமினா அக்டர் (29) ஆகியோர் வங்கதே சத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர் களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது நல்லூர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களுடன் தங்கியி ருந்து கடந்த ஒரு வருடமாக  பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருவது தெரிய வந்தது. இவர்களி டம் இருந்த போலி ஆதார் கார்டுகளை  காவலர்கள் பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் முறை யான ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து  திருப்பூருக்கு வந்து வேலை செய்தனர். இதைத்தொ டர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து, சேலம் ஆத்தூரில் உள்ள முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கி ருந்து அவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் மருத்துவ

முஉடுமலை, பிப்.4- கடந்த மாதம் முழுவதும் தொடர் மழை, தற்பொழுது கடுமையான பனி, இதன் கார ணமாக தொற்று நோய் பரவாமல் இருக்கும் வகையில் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சிறப்பு மருந்துவ முகாம் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள் ளது. மலைப்பகுதியில் இருக்கும் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதியான மாவடாப்பு,  குழிப்பட்டி, குருமலை, கருமுட்டி, பூச்சி கொட்டாம்பாறை, திருமூர்த்திமலை, ஈசல் திட்டு, தளிச்சி, கோடந்தூர், கொட்டையாறு, பொருப்பாறு, ஆட்டுமலை, வசம்குழம், புளி யம்பட்டி, மயிலாடும் பாறை, கரட்டுப்பதி, சேலையூத், காட்டுபட்டி உள்ளிட்ட 18 குடி யிருப்புகள் உள்ளன. இதில் சில குடியிருப்புப் பகுதிகள் மலை  அடிவாரப்பகுதியிலும் அதிகமான குடியி ருப்புக்கள் அடர்வனப்பகுதியிலும் பல கிலோ  மீட்டர் இடைவெளியில் இருக்கிறது. மேலும்  மாவடாப்பு,குழிப்பட்டி, குருமலை, பூச்சிக் கொட்டாம்பாறை மற்றும் மேல்குருமலை குடியிருப்புகள் ஒரே மலைப்பகுதியில் உள் ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக் கள் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்கு உடுமலை நகருக்கு வர வேண்டும் என்றால் கோவை மாவட்டம் அட்டகட்டி வழியாக  சுமார் அறுபது கிலோ மீட்டர் சுற்றித்தான் வர முடியும். மேலும் திருமூர்த்திமலை வழியாக உடுமலை செல்ல அடர் வனப்பகுதி வழி யாக தான் வர முடியும். இப்படி தங்களுடைய வாழ்வாதாரத்தின் அடிப்படை தேவைகளுக்கு கூட பெரும்  சவாலாகவே வாழ்க்கையை பழங்குடியின மக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்த நிலையில், தற்போது, கடந்த வாரம் முதல் கடுமையான பனி பெய்து வருகிறது. இதனால் பலரும் காய்ச்சல், சளி போன்ற அவஸ்த்தைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இம்மக்கள் பயன்படும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை மலைவாழ் மக்கள் சங்கத்தினரிடம் இருந்து எழுந் துள்ளது.காம் நடத்த வலியுறுத்தல்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.