ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்</strong></p>
<p>நாமக்கல், டிச.3- அரசு மருத்துவமனை யில் பணி வழங்காததால் ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்கள் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் 200க்கும் மேற்பட்ட தூய் மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் கிரிஸ் டல் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படை யில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் 22 தூய்மைப் பணியாளர்களுக்கு கடந்த நவம் பர் 24 ஆம் தேதியன்று முதல் கிரிஸ்டல் நிறு வனம் பணி வழங்காததால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் புதனன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தூய்மைப்பணியாளர்கள் கூறுகையில், அரசு மருத்துவமனையில் தூய் மைப் பணிகளை மேற்கொள்வதற்காக தான் தங்களை பணிக்கு சேர்த்தனர். ஆனால் பணிக்கு எடுத்த கிரிஸ்டல் நிறுவனம் நோயா ளிகளை கவனிப்பது, மருந்துகளை எடுத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு இதர பணி களை வழங்குகின்றனர். மேலும் உரிய சம் பளமும் வழங்குவதில்லை, முறைக்கேடும் நடைபெறுகிறது. இந்த பிரச்சனைகள் தொடர் பாக சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டால் மிரட்டுகின்றனர். தற்போது பணி வழங்காமல் கிரிஸ்டல் நிறுவனம் தங்கள் மீது நடவடிக்கை எடுத் துள்ளது. மேலும் விளக்கம் கேட்டு குறிப் பாணை வழங்கியுள்ளது. முறைக்கேட்டினை தட்டிக்கேட்ட தங்களுக்கு பணி வழங்காத தால் தான் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர்.</p>
