சிக்கல் பகுதியை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க கோரி தொடர் முழக்கம்
5 Jan 2026, 6:21 pm
<p><strong>சிக்கல் பகுதியை ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க கோரி தொடர் முழக்கம்</strong></p>
<p>இராமநாதபுரம், ஜன.5- இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியை ஊராட்சி ஒன்றியமாக அறி விக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர் முழக்க கோரிக்கை ஆர்ப்பாட்டம் திங்கட் கிழமை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் போராட்டக் குழு செயலாளர் பச்சம்மாள் தலைமையில் காலை 8 மணியளவில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் போராட்டக் குழு நிர்வாகியுமான மங்கள சாமி தலைமையில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் சிக்கல் ஊராட்சி அலுவலகம் முன் பும், சிக்கல் பேருந்து நிலையம் அருகிலும் போராட்டக் குழு தலைவர் மிசா சைபுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் காலை 11 மணி அளவில் பேய் குளம் ஊராட்சி அலுவலகம் முன்பு, போரா ட்டக் குழு பொருளாளர் கோவிந்தராஜ் தலைமையில் மற்றொரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த தொடர் ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கணிசமான அளவில் கலந்து கொண்டு, “சிக்கலை ஊராட்சி ஒன்றி யமாக அறிவிக்க வேண்டும்” என வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.</p>
