சென்னை விரைவு செய்திகள்
30 Nov 2025, 4:29 pm

தொடர்மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிதம்பரம், நவ 30- வங்கக்கடலில் உருவாகிய டிட்வா புயலால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவன கிரி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப் பேட்டை உள்ளிட்டமாவட்டம் முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 48 மணி நேரத்திற்கு மேலாக தொடர் மழை மற்றும் மிதமான மழை, கன மழை என விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலைமை ஏற் பட்டுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் இல்லாததால் நகரங்களில் உள்ள பெரிய கடைகள் திறந்து வைத்திருந்தாலும் அதிக மக்கள் கூட்டங்கள் இல்லாமல் வெறி சோடியே காணப்படுகிறது. எனவே இந்த புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தொடர்ந்து மழை பெய்து வரு வதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் வியா பாரிகள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

காஞ்சிபுரம், நவ.30- தமிழக அரசு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடனுதவியும், 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.2 லட்சம்) மானியமும் வழங்கப்படும். தொழில்நுட்ப, சந்தைப்படுத்துதல் உதவிகளும் வழங்கப்படும். முன்னுரிமை தொழில்கள்: மட்கும் பொருட்கள், விவசாய கழிவுகளில் பொருட்கள், தென்னை நார் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிலிருந்து பென்சில், ஆடை வடிவமைப்பு, அணிகலன்கள், வீட்டில் தயாரிக்கும் உணவு பொருட்கள், யோகா நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையம், மணப்பெண் அலங்கார நிலையம், சத்துமாவு உருண்டைகள், எலுமிச்சை எண்ணெய், வெட்டி வேர் எண்ணெய் உள்ளிட்டவை. புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, வங்கி கணக்கு விவரம், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு: மாவட்ட தொழில் மையம், காஞ்சிபுரம் (044-27238837, 044-27238551, 044-27236686) என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

வீட்டிலேயே முடங்கிய புதுச்சேரி மக்கள்

புதுச்சேரி, நவ.30- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‘டிட்வா’ புயலால் புதுச்சேரியில் கடந்த இரண்டு தினங்களாகக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் தங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். நிவாரணக் கோரிக்கை: தொடர் மழையின் காரணமாக அன்றாடக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரி கள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் கடு மையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகைப் பொருட்கள் நிவாரணம் அரசு சார்பில் வழங்க ப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளன.

காலமானார்

திருவள்ளூர், நவ.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி நகர 6வது வார்டு கிளைச் செயலாளர் கே. அர்ஜுனன் தாயார் சொக்கம்மாள், வயது மூப்பின் காரணமாக நத்தம் கிரா மத்தில் உள்ள இல்லத்தில் ஞாயிறன்று (நவ. 30) அதி காலை காலமானார். அவருக்கு வயது 95.அவரின் உடலுக்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. துளசிநாராயணன், கே. விஜயன், வட்டச் செயலாளர் டி. கோபாலகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள், வட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த தோழர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நத்தம் கிராமத்தில் உள்ள மயானத்தில் ஞாயிறன்று மாலை தகனம் செய்யப்பட்டது.