தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

30 Nov 2025, 4:29 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘எஸ்ஐஆர் பணியில் தொடரும் சிக்கல்’

சென்னை, நவ.30- தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ  செய்தியாளர்களிடம் பேசுகையில், எஸ்.ஐ.ஆர். பணி களில் இன்னும் பல சிக்கல்கள் தொடர்வதாகக் குறிப்பிட் டார். தேர்தல் ஆணையம் எந்த விஷயத்தையும் வெளிப் படையாக தெரிவிப்பதில்லை என்றும், 50 சதவீத மக்க ளுக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்புவதில் சிரமங்கள்  ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பீகாரில் வாக்களித்த நபர், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். படிவம் சமர்ப்பிப்பது போன்ற குழப்பங்களுக்கு தேர்தல் ஆணை யம் இதுவரை விளக்கமளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

‘ஒரு சீட்டுக்காக சேர மாட்டோம்!’

சென்னை: “ஒரு எம்.பி., சீட்டுக்காக அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டோம். கடைக்கோடி தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புபவர்களுடன் கூட்டணி அமைப்போம். ஜனவரி 9 ஆம்  தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து தெளி வான முடிவெடுத்து அறிவிப்போம்” என தேமுதிக பொதுச் செயலா ளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் மலை ஏறத் தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சிகர நிகழ்ச்சியான மகாதீபம் டிச.3 அன்று ஏற்றப்படுகிறது. இந்நிலையில், டிட்வா புயல் காரணமாக திருவண்ணா மலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய  புவியியல் வல்லுநர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலை யேறும் பாதை தற்போது உறுதித் தன்மை அற்றும், ஏற்கனவே  நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எனவே புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழு அறிக்கை  அடிப்படையில், பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும்  பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கணக்கெடுப்பு

திருவாரூர்: டிட்வா புய லால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இத னால் வாழை உள்ளிட்ட  பயிர்கள் பாதிக்கப்பட்டுள் ளன. பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நி லையில், திருவாரூரில் கனமழையால் பாதிக்கப் பட்ட நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணி  திங்கட்கிழமை முதல் தொ டங்குவதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை  8% அதிகம்

சென்னை: தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை ஞாயிற்றுக் கிழமை வரை இயல்பை விட 8 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இயல்பாக 352.5 மி.மீ மழை பொழியும் நிலையில், ஞாயிறன்று வரை 381.7 மி.மீ மழை பதிவாகி யுள்ளது. ஆனால் சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 28 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இயல்பாக 645.0 மி.மீ பொழியும் நிலையில், ஞாயிறன்று வரை 465.2 மி.மீ மழை மட்டுமே பதி வாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.