வெண்ணைமலை பிரச்சனை மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவோடு தொடர் போராட்டம்!
14 Dec 2025, 3:45 pm
<p><strong>வெண்ணைமலை பிரச்சனை மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவோடு தொடர் போராட்டம்! </strong></p>
<p>கரூர், டிச. 14 - கரூர் மாவட்டம், வெண்ணைமலை முருகன் கோவிலுக்குச் சொந்தமான இனாம் நிலங்களில் பல தலைமுறை களாக வசித்துவரும் சுமார் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதா ரத்தைப் பாதிக்கும் வகையில், அறநிலை யத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் அத்துமீறிய நடவடிக்கைகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான பல்வேறு அமைப்புகள் தீவிரப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. நிலத்தின் பின்னணி மற்றும் வழக்குச் சிக்கல் வெண்ணைமலைப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் சிறுகச் சிறுகச் சேர்த்து வாங்கிய அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் மற்றும் கடைகளுடன் கூடிய வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில், திருத்தொண்டர் சபையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் கோவில் நிலங்களை மீட்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை, அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். உரிமையியல் நீதிமன்றத்தில் பொது மக்களின் உரிமையை நிலைநாட்டக் கோரும் வழக்கு நிலுவையில் உள்ள போதும், அதிகாரிகள் வீடுகளுக்கும் கடை களுக்கும் சீல் வைப்பது, மின் இணைப்பை துண்டிப்பது போன்ற பாதகமான நட வடிக்கைகளில் ஈடுபடுவது மக்களி டையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. இந்த நிலை நீதிபதிகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையேயான அதிகார மோதலாகப் பார்க்கப்படுவதால், பாதிக்கப்படுவது பொதுமக்களே என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பெ.சண்முகம் வருகை வெண்ணைமலை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், டிச.14 ஞாயிறன்று அங்கு வருகை தந்து, நடை பெற்ற ஆதரவுக் கூட்டத்தில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், திருப்பரங் குன்றம் விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கைக் காரணம் காட்டி உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்த தமிழக அரசு, வெண்ணைமலைப் பிரச்சனை யிலும் நீதிபதிகளின் பாரபட்சமான தீர்ப்பை எதிர்த்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன; ஆனால் அவற்றில் நீதி இல்லை. பொது நல வழக்கு என்ற பெயரில் சம்பந்த மில்லாத ஒருவர் தொடுத்த வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாதாட வாய்ப்புக் கொடுக்காமல் அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு இயற்கை நீதிக்கு எதிரா னது” என்று பெ. சண்முகம் குறிப்பிட் டார். மேலும், நீதிபதிகள் அரசியல் சாச னத்துக்கு உட்பட்டுச் செயல்படாமல் ஈகோ அடிப்படையில் முடிவெடுப்பது ஆரோக்கி யமானதல்ல என்றும், மாநில அரசின் அதி கார வரம்புக்குள் மத்திய பாதுகாப்புப் படையை அழைப்பேன் என்று நீதிபதி மிரட்டுவது எல்லை மீறிய அதிகாரம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். அத்துடன், தமிழக அரசு பட்டா வழங்கிய நிலையில், தவறான தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், கேரளாவில் கோவில் நிலங்களில் வசித்த வர்களுக்கு நில உரிமை வழங்கியதைப் போல, வெண்ணைமலை மக்களுக்கும் கிரயத் தொகையைப் பெற்றுக்கொண்டு நிலத்தை சொந்தமாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். போராட்டக் குழுவின் உறுதி இந்த ஆதரவுக் கூட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செய லாளர் வி. அமிர்தலிங்கம், கட்சியின் மாவட்ட செயலாளர் மா‌. ஜோதிபாசு, விவ சாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே. கந்தசாமி உட்பட பல்வேறு கட்சி மற்றும் சங்கங்களின் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக் கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் கண்ணீருடன் பேசிய பெண்கள், பூர்வீக மாக வசித்து வரும் தங்களை திடீரென வெளியேற்றினால் தெருவில் தான் நிற்க வேண்டும் என்று வேதனை தெரிவித்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வழிமுறைகள், தங்கள் வலிமை மிக்க போராட்ட குணம், தங்கள் நம்பிக்கை யையும் மன உறுதியையும் அளித்துள்ள தாகக் கூறினர். ‘முதல்வரிடம் முறையிடுவோம்! வரும் டிசம்பர் 16 அன்று சென்னை யில் மா.கம்யூ சார்பில் நடைபெறவுள்ள பேரணியின் போது, தமிழக முதலமைச்ச ரைச் சந்தித்துப் பேசி, வெண்ணைமலை களின் பிரச்சனையை நேரடியாக எடுத்து ரைப்பதாகவும், டிசம்பர் 18ஆம்தேதி நடக்கவிருக்கும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தி, நிரந்தரத் தீர்வுகாண முயற்சிப்பதாகவும் பெ.சண்முகம் உறுதியளித்தார். (ந.நி.)</p>
<p> </p>
