தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தொடர் போராட்டம்!

28 Jan 2026, 2:33 pm
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தொடர் போராட்டம்!
<p><strong>காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி தொடர் போராட்டம்!</strong></p> <p>சென்னை, ஜன. 28 - 46 ஆயிரம் துவக்கநிலை காலிப் பணி யிடங்களை நிரப்பக் கோரி தொடர் இயக்கம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மின ஊழியர் மத்தியஅமைப்பு அறிவித்துள் ளது. இதுதொடர்பாக அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர் புதனன்று (ஜன.28) செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மின்வாரிய ஊழியர் களுக்கு பொருந்துமா என்பதை தெளிவு படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கேரள அரசைப் போன்று தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். 1.1.2023 முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். 46 ஆயிரம் ஆரம்பகட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் 4 மடங்கு பணிச்சுமை யோடு ஊழியர்கள் பணியாற்றுவதால் தினசரி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த காலிப் பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களையும், ஐடிஐ முடித்தவர்களையும், விடுபட்ட 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களையும் பயன்படுத்தி விரைந்து நிரப்ப வேண்டும். கேங்மேன் தொடர்பாக பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட நிர்வாகம், 4 மாதம் கடந்தும் நிறைவேற்றாமல் உள்ளது. 9 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட கேங்மேன்களை கள உதவியாளர்களாக பெயர்மாற்றம் செய்ய வேண்டும். அனல், புனல் மற்றும் பொதுக் கட்டுமானத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு நேரடியாக 766 ரூபாய் கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் தொடர் இயக்கத்தை நடத்த உள்ளோம். இதில் பொறியாளர் அமைப்பும், ஓய்வூதியர் அமைப்பும் பங்கேற்க உள்ளன. &nbsp;இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.