தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின் ஊழியர் பற்றாக்குறையால் நுகர்வோர் மீது சுமை

10 Dec 2025, 4:08 pm
மின் ஊழியர் பற்றாக்குறையால் நுகர்வோர் மீது சுமை
<p><strong>மின் ஊழியர் பற்றாக்குறையால் நுகர்வோர் மீது சுமை</strong></p> <p>மின்சாரம் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக மாறி யுள்ள நிலையில், தமிழக மின் உற் பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தின் (TANGEDCO) செயல்பாடுகள் அதிர்ச்சியளிப்பதாகவும், நுகர் வோர் மற்றும் பணியாளர்களின் &nbsp;நலன்களைப் புறக்கணிப்பதாக வும் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் கோபி என இரண்டு மின் பகிர்மான வட்டங்கள், ஆறு கோட்டங்கள் மற்றும் பல்வேறு துணை மின் நிலையங்களுடன் செயல்படுகின்றன. சுமார் 3.25 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகளுக்கு (இதில் 2 &nbsp;கோடிக்கும் மேல் வீட்டு இணைப்பு கள்) சேவை செய்ய, சுமார் 1.5 லட் சம் பணியாளர்கள் தேவைப்படும் &nbsp;நிலையில், அதிகாரிகளையும் சேர்த்து 80,000 பணியாளர்கள் மட் டுமே உள்ளனர். இந்த கடுமை யான ஆள் பற்றாக்குறையே பெரும்பாலான சிக்கல்களுக்கு அடிப்படை. வாரியத்தின் செயல்பாடுகள் ஒருபுறம் மின் உற்பத்தி, மறுபுறம் &nbsp;விநியோகித்தல் எனப்பிரிக்கப் பட்டுள்ளன. மாதாந்திரக் கூட்டங்களில், புதிய பணிகளுக் கான திட்டங்கள் குறித்தும், நிலு வையில் உள்ள பணிகளின் முன் னேற்றம் குறித்தும் கீழ்நிலை அலு வலர்கள் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றனர். பணிகளை முடிக்கக் &nbsp;கூடுதல் பணியாளர்களோ அல் லது தளவாடப் பொருட்களோ வேண்டும் என்று கேட்க அனு மதிக்கப்படாத நிலை உள்ளது. பற்றாக்குறையான தளவாடப் பொருட்களை நுகர்வோரிடமே பெற்றுப் பணிகளை முடிப்பது எழுதப்படாத விதியாக உள்ளது. புகார் வராமல் பணிகளை நிறை வேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந் தம் கீழ்நிலை அதிகாரிகளைச் சுமையாக்கி, விதி மீறல்களுக்குத் தள்ளுகிறது. கள உதவியாளர், கம்பியாளர் &nbsp;போன்ற ஆரம்ப நிலை பணியாளர் களுக்கு கிடைக்கப் பெறும் பதவி &nbsp;உயர்வுகள்கூட, அவர்களுடைய ஆரம்ப நிலை பணிகளின் சுமை யைக் குறைக்கவில்லை. கணக் கீட்டு ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றவர்கள்கூட இன்றும் &nbsp;கணக்கீட்டாளரின் வேலை யையே செய்வதாகக் குமுறுகின்ற னர். பிரிவு அலுவலகங்களில் கள &nbsp;உதவியாளர் நியமனம் இல்லை. &nbsp;மாறாக, கேங்மேன் பணியா ளர்கள் உதவியாளர் மற்றும் &nbsp;கம்பியாளர் செய்ய வேண்டிய &nbsp;பணிகளையும், சில அலுவல கப் பணிகளையும் சேர்த்துச் &nbsp;செய்கின்றனர். வேலைப்பளு விற்கு ஏற்ப ஆட்கள் இல்லாத தால், 8 மணி நேர வேலை என்ப தைத் தாண்டி, வாரியப் பணியா ளர்கள் இயந்திரங்களைப் போல &nbsp;வேலை நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்க வேண்டியுள் ளது. கடுமையான வேலைப்பளு &nbsp;மற்றும் மன உளைச்சல் காரண மாக, கடந்த 4, 5 ஆண்டுகளில் விபத்துகளும், உயிரிழப்புகளும் சர்வ சாதாரணமாகிவிட்டன. 80க்கும் மேற்பட்ட பணியாளர்கள் &nbsp;இறந்துள்ளனர்; 150க்கும் மேற்பட் டோர் கடுமையான பாதிப்புக ளுக்கு உள்ளாகியுள்ளனர். வாரியத்தின் செயல்பாட்டில் தனியார்மயத்தின் தாக்கம் வலுத் துள்ளது. புதிய மின்பாதைகள் அமைத்தல், மின்மாற்றிகள் நிறுவு தல் போன்ற அடிப்படைப் பணிகள் கூட ஒப்பந்த அடிப்படையில் தனி யாரிடம் விடப்படுகின்றன. துறை &nbsp;அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரர் கள் தரமற்ற பணிகளைச் செய்து விட்டு, செய்யாத பணிக்கும் சேர்த் துப் பில் போட்டு பணத்தைப் பெற்று செல்வதால், வாரியத்தின் பணம் விரயமாகிறது. மின்வாரியத்திற்கு உரிய கட்ட ணத்தைச் செலுத்தினாலும், விரை வில் மின் இணைப்பு பெற அல்லது &nbsp;பழுது நீக்க, நுகர்வோர் அல்லது இணைப்பு தேவைப்படுவோர் மேற்படியான செலவுகளை (கம் பம் நடுதல், கம்பி இழுத்தல்) செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலை உருவாக்கப்படுகிறது. உரிய கட்டணம் செலுத்தியும் &nbsp;நுகர்வோர் கூடுதல் சுமையை ஏற்க &nbsp;வேண்டியுள்ளது என்றால், மின் வாரியம் ஏன் பொதுத்துறை நிறு வனமாக நீடிக்க வேண்டும்? &nbsp;தனியாரிடமே விற்றுவிட லாமே என்ற மனநிலைக்கு நுகர் வோரை வாரியத்தின் கொள்கை கள் தள்ளுகின்றன. மின்வாரியத்தின் தற் போதைய நடவடிக்கைகள் தனி யார்மயத்தை நோக்கிய பாதை யாகவே உள்ளது. இது நுகர் வோருக்குச் சாதகமாக இல்லை; &nbsp;பணியாளர்களின் உரிமைகளை யும், பாதுகாப்பையும் உறுதி &nbsp;செய்யவில்லை. தேவையான &nbsp;ஆட்களை நியமித்து, பணியாளர் களின் வேலைப்பளுவை குறைக்க வேண்டும். நுகர்வோர் மீது சுமையை ஏற்றாமல், அரசின் &nbsp;கொள்கைகள் அமைய வேண் டும். தேர்தல் வாக்குறுதியின்படி மாதத்திற்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவையான மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க &nbsp;வேண்டுமெனில், அதன் பணியா ளர்களின் போராட்டத்தோடு உழைப்பாளி மக்களும், நுகர் வோரும் இணைந்து குரல் கொடுப் பதே தீர்வாக அமையும். - சக்திவேல், ஈரோடு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.