நுகர்வோர் உரிமையும்... பாதுகாப்புச் சட்டமும்! - ஐ.வி.நாகராஜன்
2 Mar 2026, 3:30 pm

நுகர்வோர் உரிமையும்... பாதுகாப்புச் சட்டமும்! - ஐ.வி.நாகராஜன்

இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் நுகர்வோருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இது வெறும் சட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு நுகர்வோரும் நியாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புக் கவசமாகும்.

பொருட்களின் தரம், பாதுகாப்பு, தேர்வு செய்யும் உரிமை என 6 அடிப்படை உரிமைகள் இதன் கீழ் வழங்கப் பட்டுள்ளன. ஆன்லைன் வணிகமும் புகார்களும் தற்போது ஆன்லைன் வணிகம் பெருகியுள்ள சூழலில், அது தொடர் பான புகார்களும் ஓராண்டில் 70 சத வீதம் வரை அதிகரித்துள்ளன. உதா ரணமாக, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ. 32,999-க்கு வாங்கிய மடிக்கணினி வேலை செய்யாததால் தொடரப்பட்ட வழக்கில், நுகர்வோர் குறைதீர் ஆணையம் அவருக்கு ரூ. 60,000 இழப்பீடும் புதிய மடிக்கணினியும் வழங்க உத்தர விட்டது.

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் முன் தயாரிப்பாளர் விவரம் மற்றும் சேவை மையம் குறித்து அறிவது மிக அவசியம். முறையான ரசீதுகள் இல்லாமல் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்புவது கடினம். விழிப்புணர்வு இன்மை - ஒரு பெரும் சவால் இந்தியாவில் வெறும் 25 சதவீத மக்களிடமே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்த விழிப்பு ணர்வு உள்ளதாக ஆய்வுகள் கூறு கின்றன. ரசீதுகள் மற்றும் உத்தரவாத அட்டைகளைச் சரியாகப் பாது காக்காதது, புகார்களைப் பதிவு செய்வ தில் உள்ள தயக்கம் போன்றவை நுகர்வோருக்குப் பின்னடைவை ஏற் படுத்துகின்றன.

இழப்பீடு பெறுவது கடினம் என்ற பொதுவான எண்ணமும், வழக்குத் தொடர்வதில் காட்டும் சுணக்கமும் ஏமாற்றுக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளும் தீர்வுகளும் நுகர்வோர் குறைதீர் ஆணையங் களில் நிலவும் பணியாளர் பற்றாக் குறை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இன்மை கவலையளிக்கிறது. ஒரு புகாரை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், நடைமுறையில் பல ஆண்டுகள் ஆகின்றன. 2024 ஜூலை நிலவரப்படி நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 4,000 வழக்குகள் முடிவின்றி உள்ளன. “நுகர்வோர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை” எனச் சென்னை உயர்நீதிமன்றமே அண்மையில் சுட்டிக்காட்டியுள்ளது. நுகர்வோருக்கான வழிகாட்டுதல்கள் • குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு முகவரி தெரியாத நிறுவனங்களிடம் ஏமாறக் கூடாது.

• பொருட்களின் தரம், விலை மற்றும் தகுதியான சேவை மையம் குறித்த தகவல்களை முன்னரே பெற வேண்டும்.

• பொருள் வாங்கிய ரசீது, உத்தரவாத அட்டை ஆகியவற்றைத் தவறாமல் பாதுகாக்க வேண்டும்.

• சேவை குறைபாடுகள் இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் புகாரைப் பதிவு செய்யலாம்.

அரசுடன் இணைந்து தனியார் அமைப்புகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே நுகர்வோர் பாதுகாப்பு முழுமை பெறும். அப்போது தான் சந்தையில் பொருட்களின் தரமும் நுகர்வோர் பாதுகாப்பும் செம்மையாக இருக்கும்.