தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டியலின மக்களுக்கான கோரிக்கை சாசனம் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்

15 Mar 2026, 4:11 pm
பட்டியலின மக்களுக்கான கோரிக்கை சாசனம் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்
<p><strong>பட்டியலின மக்களுக்கான கோரிக்கை சாசனம் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்</strong></p> <p>சென்னை, மார்ச் 15 - 2026 சட்டமன்றத் தேர்தலை யொட்டி சனிக்கிழமை (மார்ச் 14) சென் னையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு &nbsp;முன்னணி சார்பில் பட்டியலின பழங்குடி மக்களுக்கான சமூக நீதி கோரிக்கை சாசன தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் கோரிக்கை சாச னத்தை முன்மொழிந்தார். விரிவான சமத்துவப் பள்ளிக்கான வழிகாட்டல் ஆவணத்தை வெளியிட வேண்டும். நீட் தேர்வினால் ஏற்படும் &nbsp;பாதிப்பை தடுக்க அரசுப் பள்ளி மாண வர்களுக்கான 7.5 ஒதுக்கீட்டில், இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக் கீட்டை 20 சதவீதமாக உயர்த்த வேண்டும். &nbsp;பட்டியல், பழங்குடியினர் தொழில் வர்த்தகங்களில் பங்கேற்கும் விதமாக &nbsp;திட்டங்களை வகுக்க வேண்டும். நிலச் &nbsp;சீர்திருத்தம் மூலம் நிலம் வழங்குவ தோடு, பஞ்சமி நிலங்களை மீட்டு தர &nbsp;வேண்டும். அரசு நிலங்களில் குடியிருப் போருக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். கிராமப்புற வேலை உறுதித் &nbsp;திட்டத்தில் தலித் மக்கள் மீது பார பட்சங்கள், தனி இடங்கள், தனி நாட் களில் வேலை வழங்குவது போன்ற பாகுபாடுகளை களைய வேண்டும். வன்கொடுமையால் பாதிக்கப்பட் டோர், குற்றம் புரிவோர் மீது உரிய &nbsp;சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு &nbsp;செய்ய வேண்டும். வன்கொடுமை வழக்குகளில் 30 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து 60 நாட்களுக் குள் வழக்கை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங் களை முன்மொழிந்தார். இந்த அறிக்கை மீது வெண் மணி (திராவிடத் தமிழர் கட்சி), மு. மதிப்பறையனார் (அம்பேத்கர் மக்கள் &nbsp;படை), சைதை அன்புதாசன் (டாக்டர் &nbsp;அம்பேத்கர் பேரவை), எஸ்.விஸ்வ நாதன் (கொங்கு விடுதலைப் புலி கள் கட்சி), தலித் நதியா (தலித் விடுதலை &nbsp;இயக்கம்), சசிகுமார் (ஏப்ரல் 14 இயக்கம்), த.லோகேஷ் குமார் (மகா ஜன சோசலிஸ்ட் கட்சி), ம.ராஜேந்திரன் (தமிழக ஜனநாயக பேரவை), கே.சர வணன் (ஜெய் அம்பேத்கர் நலச்சங்கம்), &nbsp;என்.தீபா (வியாசை தோழர்கள்), டி.ஜி.சம்பத் (தமிழ்நாடு பன்னியாண்டிகள் சங்கம்), உமா மகேஸ்வரி (ஐந்திணை மக்கள் இயக்கம்), ஆனந்த குமார் &nbsp;(இந்திய மாணவர் சங்கம்), அ.கும ரேசன் (பத்திரிக்கையாளர்) ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். முன்னணியின் மாநில பொதுச் &nbsp;செயலாளர் பி.சுகந்தி நிறைவுரை யாற்றுகையில், &ldquo;அமைப்புகளின் தலைவர்கள் வழங்கிய ஆலோசனை களை உள்ளடக்கி, கோரிக்கைகளை மேம்படுத்தி அனைத்து அரசியல் கட்சி களுக்கும் கோரிக்கை சாசனம் வழங்கப்படும்&rdquo; என்றார். முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்ன ணியின் சிறப்புத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன், மாநிலச் செயலாளர்கள் வி.ஜானகிராமன், ச.லெனின், மாவட்டச் செயலாளர்கள் எம்.ராஜ்குமார் (வட சென்னை), ஐ.ஆபேல் பாபு (மத்திய சென்னை), மாநிலக் குழு உறுப்பினர் வி.ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.