கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
17 Feb 2026, 3:36 pm

ஆவின் முகவர்களுடன் ஆலோசனை

நாமக்கல், பிப்.17- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் ஆவின் முகவர்களுடன் ஆலோசனை முகாம் திங்களன்று பைபாஸ் சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு பொது மேலாளர் சண் முகம் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற முகவர்கள் பலர், பால் கெட்டு போனால், பால் பாக்கெட் மாற்றி தருவது இல்லை, பால் லாரி அடிக்கடி தாமதமாக வருவதால் வாடிக்கை யாளர்கள் வேறு கடைக்கு போய் பால் வாங்கி விடு கின்றனர். எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. லாரி ஓட்டு நரை ஏன் தாமதம் என்றால், அப்படிதான் வரும், இஷ் டம் இருந்தால் வாங்கு, என்று ஓட்டுநர்கள் பேசுவதால், ஏன் தாமதம் என்று கேட்கவே பயமாக உள்ளது. மேலும், திடீரென்று பால் அதிகம் தேவை என்றால், உடனே ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும். ஒரு பெட்டிக்கு நான்கு அல்லது ஐந்து பால் பக்கெட்டுக்கள் அடிக்கடி திருடப்படுகிறது. ஓட்டுநர் களை கேட்டால் எங்களுக்கு தெரியாது என்று கூறு கின்றனர். நாங்கள் பால் வியாபாரம் செய்து என்ன லாபம் சம்பாதிக்க முடியும்? என்பது உள்ளிட்ட பல் வேறு புகார்கள் கூறினார்கள். இதனையடுத்து பொது மேலாளர். கோரிக்கை கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆவின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய செயலி குறித்து விளக்கம் கொடுத்து, மிக எளிமையா னது, இதனை முகவர்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டும் என்றும் கூறினார். இதில், துணை பதிவாளர் சண்முகநிதி, திருச்செங்கோடு விற்பனை பிரிவு அலுவலர் திவாகர், குமாரபாளையம் செயலர் வெங் கட்ராமன், பால் சொசைட்டி கணினி அலுவலர் நிதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஈஷாவில் ராணுவ அதிகாரிகள் பங்கேற்புக்கு எதிர்ப்பு

கோவை, பிப்.17- கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவ ராத்திரி விழாவில், இந்திய ராணுவ உயர் அதிகாரி கள் சீருடையுடன் பங்கேற்றது அரசியலமைப்புச் சாச னத்திற்கு எதிரானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி விடுத்துள்ள அறிக்கையில், சிவராத்திரி விழாவில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, இந்திய ராணு வத்தின் முப்படை உயர் அதிகாரிகளும் தங்களது அதி காரப்பூர்வ சீருடையுடன் பங்கேற்றதுடன், ஈஷா நிறுவ னர் ஜக்கி வாசுதேவ் வழங்கிய ‘பவ்ய பாரத் பூஷன்’ விருதுகளையும் பெற்றுள்ளனர். இராணுவ அதிகாரிக ளின் இந்த நடவடிக்கை இந்திய அரசியலமைப்புச் சாச னத்தின் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே, இதில் சம்பந்தப்பட்ட முப்படை அதிகாரி கள் மீது ஒன்றிய அரசு உடனடியாக கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“வாக்காளரியல் கல்வி” அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டியது கட்டாயம்: வீ.ராமராஜ்

கோவை, பிப். 17- “மக்களாட்சியின் உண்மையான பாதுகா வலனாக திகழும் ‘வாக்காளரியல்’ கல் வியை, குடிமக்கள் அனைவருக்கும் வழங்கு வதை அரசின் கடமையாக அரசியலமைப் பில் சேர்க்க வேண்டும்” என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ.ராமராஜ் தெரிவித்துள்ளார். கோவை அரசு கலைக் கல்லூரியின் அர சியல் அறிவியல் துறை சார்பில், “வாக்கா ளரியல் கல்வி ஏன் தனித்துறையாகக் கற்பிக் கப்பட வேண்டும்?” என்ற தலைப்பில் கருத்த ரங்கம், இத்துறைத் தலைவர் பேராசிரியர் பி. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில், ‘வாக்காளரியல் ஆராய்ச்சி இத ழின்’இணையதளத்தை (https://jovar.researchpark.in/) தேர்வு கட்டுப்பாட்டு அலு வலர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் வீ. ராமராஜ் பேசு கையில், “முன்பு தத்துவவியல் மற்றும் சமூக வியலின் ஒரு பகுதியாக இருந்த ‘அரசியல் அறிவியல்’, மக்களாட்சி பரவத் தொடங்கிய 125 ஆண்டுகளுக்கு முன்பே தனித்துறையா னது. அதேபோல், சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் ‘பொது நிர்வாகம்’ தனிப்பிரிவாக உரு வெடுத்தது. இன்றைய சூழலில், வாக்கு மற்றும் வாக்காளர்கள் குறித்த ‘வாக்காள ரியல்’ கல்வியை தனித்துறையாக பயிற்று விப்பதும் ஆய்வு செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். அரசியல் அறிவியலும் வாக் காளரியலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங் கள் போன்றது. அரசியல் சித்தாந்தங்கள், கட்சி முறைகள் மற்றும் அரசாங்கக் கட்ட மைப்புகளைப் போதிக்கிறது. புள்ளிவிவர அடிப்படையில் தேர்தல் வெற்றி-தோல்வி களை மட்டுமே கணிக்கிறது. வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சட்டமன்றம், நீதித்துறை உள்ளிட்ட ஜனநா யக நிறுவனங்களைப் பாதுகாக்கவும், நல் லாட்சி மற்றும் உலக அமைதிக்கும் வழிவகுக் கிறது. தேர்தல் முறையை ஏற்றுக்கொண்ட அனைத்து நாடுகளிலும் வாக்காளரியல் கோட்பாடுகளை பரப்புவதே ‘வாக்காளரி லிசம்’ ஆகும். எதிர்காலத் தலைமுறையின ருக்கு மக்களாட்சியின் மகத்துவத்தைப் புரிய வைக்க, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழ கங்கள் தங்களது பாடத்திட்டத்தில் வாக்காள ரியலை ஒரு பாடமாகச் சேர்க்க வேண்டும், என்றார்.

பட்டியலினத்தவரின் சொத்துகள் திரும்ப ஒப்படைப்பு

ஈரோடு, பிப்.17- சலங்கபாளையம் பேரூராட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலினத் தவரின் பன்றிகள் பெரும் போராட்டத் திற்கு பிறகு திரும்ப வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட் டம், கருப்பம்பாளையத்தை சேர்ந்த பூபாலகுமார் (பட்டியலினத்தை சேர்ந்த வர்) தாட்கோவில் தொழில் கடனுக்கு விண்ணப்பித்து கடன் பெற்றார். சலங்க பாளையம் பேரூராட்சிப் பகுதியில், தனக்கு சொந்தமான இடத்தில், வெண் பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். சுமார் 6 மாத காலம் பெற்ற கட னுக்கு தவணை தொகையை வங்கி யில் தவறாமல் செலுத்தி வந்தார். இந்நி லையில், அருகிலுள்ள சாதி ஆதிக்க வாதி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொய் புகாரளித்தார். புகாரின் உண் மைத்தன்மை குறித்து விசாரிக்காமல், பேரூராட்சி செயல் அலுவலர், நோட் டீஸ் வழங்காமலும், மாவட்ட ஆட்சி யர் தலைமையில் தாட்கோ கடன் கொடுத்திருந்த நிலையிலும், போதிய வாய்ப்பு அளிக்காமல் கடந்த பிப்.9 ஆம் தேதி பன்றிகளை பறிமுதல் செய் தார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியினர் பாதிக்கப் பட்டருக்கு ஆதரவாக களம் கண்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தொடர்ந்து, திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம், தாட்கோ கடன் தொடர்ந்து செலுத்த வேண்டுமானால், பன்றி வளர்க்க அனுமதியளிக்க வேண் டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட் டது. இதைத்தொடர்ந்து, செவ்வாயன்று பேரூராட்சிகள் உதவி இயக்குநர் தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதையடுத்து பறிமுதல் செய்யப் பட்ட பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் திருப்பிக் கொடுத்தது. பாதிக்கப்பட்ட வர் தனக்கு உதவியாக இருந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துள் ளார்.

கோவை மாநகராட்சி பட்ஜெட்: கல்விக்கு முக்கியத்துவம்!

கோவை, பிப்.17- கோவை மாநகராட்சியின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வரவு - செலவு திட்ட அறிக்கையில் கல்வி மற்றும் சுகா தாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வரவு - செலவு திட்ட அறிக்கையை மேயர் கா. ரங்க நாயகி திங்களன்று வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் மாநகராட்சியின் மொத்த வருவாய் வரவினம் ரூ.4,915.50 கோடி எனவும், மொத்த செலவினம் ரூ. 5,041.71 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது. இதன் மூலம் நிகர பற்றாக் குறை ரூ.126.21 கோடியாக உள்ளது. கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் பற் றாக்குறை ரூ.139.83 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது ஓரள வுக்கு குறைந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கு மட்டும் 57 முக்கிய அறிவிப்புகள் வெளி யிட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநக ராட்சிப் பள்ளிகளில் கூடுதல் கட்டிடங் கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட ரூ.20 கோடி யும், கழிப்பிட வசதிகளுக்கு ரூ.5 கோடி யும் ஒதுக்கப்பட்டுள்ளது. மைதானம் இல்லாத பள்ளிகளில் வகுப்பறைகளின் மேல் பகுதியில் கூரையுடன் கூடிய உள் விளையாட்டு மைதானங்கள் அமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்நிலை மற்றும் மேல்நி லைப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க ரூ.1 கோடி, மாணவர்களின் மொழித்திறனை மேம் படுத்த 10 பள்ளிகளில் மொழி ஆய்வகங் கள் அமைக்க ரூ.1.50 கோடி என பல் வேறு கல்வி சார் திட்டங்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. மாணவர்களை கீழடி, கொடுமணல் போன்ற வரலாற்று இடங் களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வும், செஸ் மற்றும் கிரிக்கெட் பயிற்சிகள் அளிக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையை பொறுத்த வரை, போத்தனூர், சிங்காநல்லூர் மற் றும் சரவணம்பட்டியில் ரூ.12 கோடி செலவில் டயாலிசிஸ் சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும். சரவணம்பட்டி, காளப் பட்டி, வேலாண்டிபாளையம் உட்பட 4 இடங்களில் ரூ.10 கோடியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங் கள் அமைக்கப்பட உள்ளன. உள்கட் டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் முக்கி யமாக நொய்யல் ஆற்றைப் புனர மைக்க ரூ.202 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது. நகரின் முக்கியச் சந்திப்புகளான லட்சுமி மில், உக்கடம் மற்றும் நஞ்சப்பா சாலை பகுதிகளில் நடை மேம்பாலங் கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கவும், உக்கடம், காந்திபுரம் பேருந்து நிலையங்களைச் சீரமைக்க வும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் 25 இடங்களில் மின் வாகன சார்ஜ் நிலையங்கள் ரூ.5 கோடியில் அமைக்கப்படும். 100 வார்டு களிலும் ரூ. 63.64 கோடியில் 108 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும், இதில் பெண்களுக்கென பிரத்யேகமாக 5 இடங்களில் ‘பிங்க் பார்க்’ அமைக்கப்ப டும். மேலும், கோவை செம்மொழி பூங் காவில் ஆண்டுதோறும் மலர் கண் காட்சி நடத்த மாநகராட்சி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கை எ டுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள் ளது.

காலவரையற்ற வேலைநிறுத்தம் லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

நாமக்கல், பிப்.17- தகுதி சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் லாரிகள் 25 ஆம் தேதியன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையா ளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஒரு லாரிக்கு தகுதி சான்றிதழ் பெறுவ தற்கான கட்டணம் இதுவரை ரூ.850 மட்டுமே இருந்தது. ஆனால் ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் அது ரூ.28,200 ஆக உயர்த்தப்பட்டு, 17.11.2025 முதல் அமலுக்கு வந்துள் ளது. இதுகுறித்து மாநில அரசின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்றும், 92 நாட்களாக எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இதனால், தமிழகத்தில் இயங்கும் 6 லட்சம் கனரக வாகனங்கள் மட்டுமல்லாமல், இலகுரக வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் 20 முதல் 30 லட்சம் வாகனங்கள் வரை வருகின்ற 25 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், என் றார்.

மயான இடத்தை விரிவுபடுத்தி, கூடாரம் அமைக்க வலியுறுத்தல்

உதகை, பிப்.17- கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட நேர்கொம்பை கிரா மத்தில் முறையான குடிநீர் விநியோகம் மற்றும் மயான இடத்தினை விரிவுபடுத்தி, கூடாரம் அமைத்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, 15 ஆவது வார்டுக்குட்பட்ட நேர்கொம்பை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதாரமற்ற முறை யில் குடிநீர் விநியோகம் செய்வதால், அசுத்தமான குடி நீரை பயன்படுத்துவதால், நோய் தொற்று ஏற்படும் அபா யம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள் ளனர். மேலும், கிராமத்தில் இறந்தவர்களின் உடல், அருகிலுள்ள ஓடையின் அருகே அடக்கம் செய்யப்படு கிறது. ஆனால், மூன்றடி குழி எடுத்தாலே தண்ணீர் வந்து விடுவதாகவும், இந்த தண்ணீரிலேயே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்படு கிறது. எனவே, மயானத்தின் இடத்தை விரிவுபடுத்தி தர வேண்டும். இறுதி சடங்குகள் நடத்த கூடாரம் அமைத்துத் தர வேண்டும். முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர்.

இருசக்கர வாகனங்களில் வருவோர் மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் இறக்கி விட அறிவுறுத்தல்

திருப்பூர், பிப்.17- மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் அனைவரும் வாகனத்தை பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே நிறுத்தி, தங்களது குழந்தைகளை இறக்கி விட வேண்டும், வாகனத்தை ரோட்டில் நிறுத்தி இறக்கிவிடக் கூடாது என்று மாநகரப் போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் நகரத்தில் உள்ள தனியார் பள்ளிகளை பிரதிநி தித்துவப்படுத்தும் நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளக்கக் கூட்டம் திங்களன்று, காலை 11.00 மணிக்கு வடக்கு போக்குவரத்து காவல் சார்பாகவும், மதியம் 12.00 மணிக்கு தெற்கு போக்குவரத்து காவல் சார்பாகவும் நடைபெற்றது. பள்ளிக்குள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை அனுமதிப்பது மற்றும் பிரதான சாலை வழி யாக எந்த தடையும் இல்லாமல் பள்ளிக்குள் வாகனங்கள் செல்ல அனுமதிப்பது குறித்து விளக்கக் கூட்டம் நடை பெற்றது. மேலும் பள்ளியின் சார்பாக சாலைப் பாதுகாப்பு ரோந்துப் பிரிவை உருவாக்குவதன் அவசியம் குறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு விளக்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் மூலம், பெற்றோர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், பள்ளியில் படிக்கும் மாண வர்கள் தங்கள் பெற்றோருக்கு இதை வலியுறுத்த வேண்டும் என்றும் ஆசிரியர்களிடம் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 25 தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதில் திருப்பூர் மாநகர உதவி ஆணையர் போக்குவரத்து அ. சேகர், ஆய்வாளர் முருகே சன் மற்றும் ஆய்வாளர் வெங்கடாஜலம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

காங்கேயத்தில் ரூ.4.74 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

திருப்பூர், பிப்.17- காங்கேயத்தில் திங்களன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்புகள் ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏல முறையில் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. இதில், காங்கே யம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயி கள் 2,774 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.175 க்கும், குறைந்தபட்சமாக ரூ.108 க்கும், சராசரியாக ரூ.174 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

பாத்திரத் தொழிலாளர் கூலி உயர்வுக்கு பிப்.23 ல் அடுத்துக்கட்ட பேச்சுவார்த்தை

திருப்பூர், பிப்.17 – பாத்திரத் தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பான முதற்கட்ட பேச்சு வார்த்தை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பிப். 23ஆம் தேதி நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாத்திரத் தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 31.12.2025 அன்று முடிவடைந்தது. முன்னதாக அனைத்து பாத் திரத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் குழுக் கூட்டம் கடந்த டிசம்பர் 23 அன்று நடை பெற்றது. அதில், செம்பு மற்றும் பித்தளைப் பாத்திரங்களுக்கு 60 சதவீதமும், ஈயப் பூச்சுப் பொருட்களுக்கு 70 சதவீதமும், எவர் சில்வர் பொருட்களுக்கு 50 சதவீதமும் கூலி உயர்வு வழங்க வேண்டும் என திருப்பூர் வட்டார முழு கூலி பாத்திரப் பட்டறையா ளர் சங்கத்திற்கும், திருப்பூர் பாத்திர வியாபா ரிகள் சங்கத்திற்கும் கடிதம் அளிக்கப்பட்டது. அந்த கடிதத்திற்கு, பேச்சுவார்த்தையை தள்ளிப்போடும் விதமாக, “ஓராண்டுக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம்” என பாத்திர வியாபாரிகள் சங்கம் சார்பில் பதில் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அணுகுமுறை தொழிற்சங்கங்க ளுக்கு ஏற்புடையதாக இல்லை. தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாகப் பேச்சுவார்த் தையை தொடங்கக் கோரி பிப். 2 ஆம் தேதி தொழிலாளர் உதவி ஆணையருக்கு கடிதம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், உதவி ஆணையர் முன்னிலையில் திங்க ளன்று பாத்திரத் தொழிற்சங்கத்தினர் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைய டுத்து, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் பிப். 23 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் சிஐடியு சார் பில் கே.குப்புசாமி, என்.குபேந்திரன், எல்பி எப் சார்பில் என்.வேலுச்சாமி, எம்.ரத்தின சாமி, எடிபி சார்பில் கே.குணசேகரன், பி.விஜ யகுமார், ஏஐடியுசி சார்பில் எஸ்.செல்வராஜ், பி.நாகராஜன், எச்.எம்.எஸ். சார்பில் கே.திரு ஞானம், பாண்டியராஜன், காமாட்சி அம்மன் சங்கம் சார்பில் எஸ்.பி.அர்ஜுனன், ஆறுமுக சாமி, ஐஎன்டியுசி சார்பில் பி.பூபதி, அசோக் குமார், பிஎம்எஸ் சார்பில் ஏ.டி.சீனிவாசன், என்.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவர் உயிரிழப்பு

திருப்பூர், பிப்.17- திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவன், வகுப் பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, தண்டகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த, முரளி - மணிமேகலை தம்பதியின் மகன் தீபக் 7ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், செவ்வாயன்று தீபக் உணவு இடைவேளையின்போது திடீரென மூக்கில் நுரை தள்ளி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் மாணவனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாணவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தீபக்கின் பெற்றோருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த தீபக்கின் பெற் றோர், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்ப தாகவும், என் மகனுக்கு உடல்நிலை சரி யில்லை என்று அங்கும் இங்குமாக இரண்டு மணி நேரம் பள்ளி நிர்வாகம் அலைக்க ழித்தாகவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறு குறு தொழில்களுக்கு தனி கொள்கை ரிசர்வ் வங்கியிடம் ஏஇபிசி வலியுறுத்தல்

திருப்பூர், பிப்.17 - சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் ஏற்றுமதி துறைக்கு தனி கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று இந் திய ரிசர்வ் வங்கியிடம் ஆயத்தஆடை ஏற்றுமதி மேம்பாட் டுக் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி திங்களன்று எம்எஸ்எம்இ நிறுவனங் களின் முக்கிய பிரச்சனைகள் குறித்து கலந்துரையாட சந் திப்பை ஏற்பாடு செய்தது. இந்த கூட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஆயத்தஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர் ஆ.சக்திவேல் கலந்து கொண்டு, எம் எஸ்எம்இ ஏற்றுமதி துறைக்கான தனித்துவமான கொள்கை வடிவமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார். குறிப்பாக, இந்தியாவின் ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித் துறைக்கு வரவிருக்கும் தசாப்தம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பல்வேறு உலக வர்த்தக கூட்டமைப்புகள் மற்றும் முக்கிய சந்தைகளுடன் கையெழுத்தாகும் வர்த்தக ஒப்பந்தங் கள் மூலம் இந்திய ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்புகளை உரு வாக்கும் நிலையில், சிறு, குறு, நடுத்தர ஏற்றுமதியா ளர்களுக்கு சிறப்பான கொள்கை ஆதரவு, எளிமையான ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் மேம்பட்ட கடன் அணு கல் போன்ற சலுகைகள் தேவைப்படுகின்றன என அவர் வலி யுறுத்தினார்.