நலவாரியத்தில் குவிந்து கிடக்கும் ரூ. 7ஆயிரம் கோடி தீபாவளி போனசாக ரூ. 5 ஆயிரம் கேட்டுகட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
16 Sept 2026, 9:08 pm

நலவாரியத்தில் குவிந்து கிடக்கும் ரூ. 7ஆயிரம் கோடி தீபாவளி போனசாக ரூ. 5 ஆயிரம் கேட்டுகட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை, செப். 16 -தீபாவளி பண்டிகைக் கான போனசாக 5 ஆயிரம்ரூபாய் வழங்கக்கோரி, கட்டு மானத் தொழிலாளர்கள், புதன்கிழமை (செப்.16) அன்று தமிழகம் முழுவதும்நலவாரிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டுமானப் பொருட் களின் கடுமையான விலை உயர்வு காரணமாக கட்டுமானப் பணிகள் தடைப் பட்டுள்ளன. எனவே, கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண் டும், புதிய நலவாரிய முத்தரப்புக் குழுவை அமைக்க வேண்டும். பணி இல்லாத காலத்தில் வேறு வேலைக்கு செல்லும் தொழிலாளர் களின் இபிஎப் கணக்கைக் காட்டி, நலவாரிய உறுப்பினர் பதிவை ரத்து செய்யக் கூடாது.

அரசுக்கு கோரிக்கை

கேட்பு மனுக்களுக்கு விரைந்து பணப் பயன்களைவழங்க வேண்டும், ஓய்வூதியத்தை 1200 ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறும் தொழிலாளி இறந்தாலும், அவரது குடும்பத்திற்கு இயற்கை மரண நிதிவழங்க வேண்டும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் வீடுகள்வழங்கப்படும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும், 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில்போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களின் முடிவில், நலவாரிய அலுவலர்களிடம் மனுக்களும் அளிக்கப்பட்டன.

சென்னையில் ஆர்ப்பாட்டம்

இதன் ஒருபகுதியாக தியாகராயர் நகரிலுள்ள சென்னை மாவட்ட நல

வாரிய பதிவு அலுவலகம் முன்பு சென்னை மாவட்டசங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கே. சுப்பிரமணி, இ. மூர்த்தி, பழனி (தென்சென்னை), மார்டின்(மத்திய சென்னை), தனபால் (வடசென்னை) உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் ஏ. நடராஜன் சிறப்புரை யாற்றினார்.

ஓய்வூதியத்தை உயர்த்துக!

முன்தாக, செய்தியா ளர்களிடம் பேசிய ஏ. நடராஜன், “நலவாரிய முத்தரப்புக் குழுவில் ஏற்கப்பட்டமுடிவுகளுக்கு விரைந்துஅரசாணை வெளியிட வேண்டும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரி யத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் குவிந்துள்ளது நிலையில், அந்தத் தொகையை வேறு பணிகளுக்கு மடைமாற்றம் செய்யாமல், கேரளம், புதுச்சேரியில் பண்டிகை கால சிறப்புத் தொகை வழங்கப்படுவது போல, தமிழகத்திலும் நலவாரிய நிதியிலிருந்து தீபாவளி போனசாக5 ஆயிரம் ரூபாய்வழங்க வேண்டும்”என்றார்.

மேலும், “கட்டட கட்டுமான ஒழுங்குமுறை சட்டம்மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி கட்டுமானதொழிலாளர் ஓய்வூதியத் தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 60 வயதுபூர்த்தியான தொழிலாளர் களுக்கு, ஓய்வூதியம் வழங்குவதில் அலைக்கழிப்பை கைவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.