கட்டுமானத் தொழிலாளர்கள் ரூ.5000 போனஸ் கேட்டு முழக்கம்
30 Oct 2026, 12:04 am
<p><strong>கட்டுமானத் தொழிலாளர்கள் ரூ.5000 போனஸ் கேட்டு முழக்கம்</strong></p><p>நாமக்கல், அக்.29-அனைத்து தொழிலாளர்களுக்கும் நலவாரியம் மூலம் தீபாவளி போனஸ் ரூ.5000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல்லில் கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>கட்டுமானத்தொழிலில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நலவாரியம் மூலம் தீபாவளி போனஸாக ரூ.5000 வழங்க வேண்டும். தில்லி, கர்நாடகா மாநில அரசு வழங்குவது போல், ரூ.3000 நலவாரிஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளிக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளி மரணமடைந்தால், அவரது குடும்பத்திற்கு இயற்கை மரண நிதி ரூ.55000, ஈம சடங்கு நிதி வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமையாக்கி உடனடியாக ஆணையும், நிதியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சிவராஜ், விசைத்தறி தொழிலாளர்கள் சங்க திருச்செங்கோடு பகுதி செயலாளர் பி.முருகேசன், தலைவர் ராமஜெயம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி, தையல் சங்க பொருளாளர் ஐ.ராயப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சங்கத்தின் மாநிலதுணைப்பொதுச்செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது சிறப்புரையாற்றினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் ஏ.ஆதிநாராயணன், ஆர்.வேலாயுதம் மற்றும் ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.</p>
