தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுற்றுச்சூழல் மாசிலிருந்து பாதுகாத்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

7 Oct 2026, 2:02 am
சுற்றுச்சூழல் மாசிலிருந்து பாதுகாத்திடுக  கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சுற்றுச்சூழல் மாசிலிருந்து பாதுகாத்திடுக கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், அக். 6- சுற்றுச்சூழல் மாசுவில் மூழ்கியுள்ள சிறுபுழல்பேட்டை மக்களைத் தமிழ்நாடு அரசு மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (அக். 6) புதுப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்நடை பெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள சிறுபுழல்பேட்டை ஊராட்சி யில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சுற்றிலும் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் ரசாயனக் கழிவுகளால் பகுதி முழுவதும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, மக்கள் பல்வேறு மர்ம நோய்க ளால் பாதிக்கப்பட்டு ஆயுட்காலம் குறை யும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து பல முறை மனு கொடுத்தும் அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும், கால்வாயில் இருந்து சாலையின் மேல் 3 அடி அளவிற்கு மழைநீர் தேங்குவதால் பழுதுடைந்துள்ள பாதையைச் சீரமைக்க வேண்டும், சிறு புழல்பேட்டை புதுஏரிக் கால்வாயைத் தூர்வாரி ஆழப்படுத்தி சிறு பாலம் அமைக்க வேண்டும், சிறுபுழல்பேட்டையிலிருந்து சிப்காட் செல்லும் பாதையைச் சீரமைக்க வேண்டும் மற்றும் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்குக் கட்டுமான சங்கத்தின் வட்டத் தலைவர் இ.ரங்கன் தலைமை தாங்கினார். இதில் கட்டுமான சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சி.சீனு, மாவட்டச் செயலாளர் இ.வேலன், மாவட்டத் துணைச் செயலாளர் வி.ஆர்.லட்சுமணன், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், நடைபாதை வியா பாரிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் வி.ஜோசப், புதுப்பேட்டை கிராம நிர்வாகி திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.