போனஸ் கேட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
29 Sept 2026, 11:38 pm

போனஸ் கேட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை, செப்.29-தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸாக ரூ. 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். கட்டுமான நலவாரிய முத்தரப்புகமிட்டியை உடனடியாக அமைத்திட வேண்டும். மணல், ஜல்லி, கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி, நலிவடைந்து வரும் கட்டுமானத் தொழிலை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்ஒருபகுதியாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.மனோகரன் தலைமை வகித்தார். சிஐடியுமாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் வி.ஆனந்தன்,பொருளாளர் எம்.ஏழுமலை உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார். இதில், சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் என்.ஆர்.முருகேசன், ஆர்.ரங்கசாமி, நிர்வாகிகள் ஆர்.தேவராஜ், என்.செல்வராஜ், எம்.கணேசன்உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.