ரூ.5000, பொங்கல் தொகுப்பு கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
16 Dec 2025, 6:10 pm
<p><strong>ரூ.5000, பொங்கல் தொகுப்பு கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், டிச. 16 - கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் போனஸ் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி திருப்பூரில் கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடத்தியது. திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே நல வாரிய அலுவலகம் முன்பு செவ்வாயன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.வேலுச் சாமி தலைமை ஏற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் துணைத் தலைவர் பி.பொன்னுசாமி, மாநிலக்குழு உறுப்பி னர் பி.ரமேஷ், மாநிலச் செயலாளர் டி.குமார், சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.பாலன் ஆகியோர் உரை யாற்றினர். ஒன்றிய அரசு நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப் புகளை கைவிட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.</p>
