ரூ.5 ஆயிரம் பொங்கல் போனஸ் கேட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
2 Jan 2026, 3:33 pm
<p><strong>ரூ.5 ஆயிரம் பொங்கல் போனஸ் கேட்டு கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>நாமக்கல், ஜன.2- பொங்கல் தொகுப்புடன், ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு கட்டு மானத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் அனைத்துப் ்பிரிவு தொழிலாளர்களுக்கும் பொங்கல் தொகுப்பு கொடுப்பதுடன், ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்க வேண் டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, மாத ஓய்வூதிய மாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலா ளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெரும் கட்டுமானத் தொழிலாளி மரணம டைந்தால், ரூ.55 ஆயிரம் இறப்பு நிதி வேண்டும். வீடு இல்லா தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழனன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், வெப்படை நால் ரோடு பகுதி களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் வி.எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.அசோ கன், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.தன பால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் நிர்வாகிகள் சேகர், மெய்யநாதன், கண்ணை யன், பழனிச்சாமி, நடேசன், லட்சுமணன், அர்ஜுனன், ஆறுமுகம், முத்துசாமி, பட்டாயம்மாள், தெய்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
