தீபாவளி ஊக்கத்தொகை வழங்கக் கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
28 Oct 2026, 1:04 am

தீபாவளி ஊக்கத்தொகை வழங்கக் கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், அக்.27-தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கக் கோரி, கடலூரில் கட்டுமானத் தொழி லாளர்கள் செவ்வாய்க் கிழமை (அக்.27) பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட கட்டு மானத் தொழிலாளர் சங்கம் சிஐடியூ சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணி, செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகிலிருந்து தொடங்கி, தீபன் நகர் பகுதி யில் உள்ள தமிழ்நாடு கட்டு

மானத் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் வரை நடைபெற்றது.

இதில், பெண்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணி யாகச் சென்றனர்.

தொடர்ந்து, கட்டு மானத் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவர் பொறியாளர் என். இளங்கோவன் தலைமை வகித்தார். கட்டுமான சங்க மாநில உதவிப் பொதுச்செயலாளர் கே. தங்க மோகனன் சிறப்புரையாற்றி னார்.தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் தீபாவளி ஊக்கத்தொகை யாக ரூ.5,000 வழங்க

வேண்டும். தொழிலாளர்க ளின் நலனைக் கருத்தில் கொண்டு நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.பின்னர், கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கோரிக்கைகளைவலியு றுத்தி மனு அளிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ கடலூர் மாவட்ட தலைவர் பி.கருப்பையன், மாவட்ட செயலாளர் டி. பழனிவேல், கட்டுமான சங்க மாவட்டப் பொதுச்செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறப்பு தலைவர் கே.சீனிவாசன், மாநில குழு உறுப்பினர்என்.ஜெயசீலன், மாவட்டபொருளாளர் எஸ்.கார்த்திகேயன்,மாநகரச் செயலாளர் ஏ.எஸ். பாபு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றியநிர்வாகிகள் மற்றும்கட்டுமானத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.