கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநில தொழிற்சங்க பயிற்சி வகுப்பு
22 Jul 2026, 10:12 pm
<p><strong>கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநில தொழிற்சங்க பயிற்சி வகுப்பு</strong></p><p>நாகர்கோவில், ஜூலை 22 - இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு சார்பில் இரண்டு நாள் தொழிற் சங்க வகுப்பு குமரி மாவட்டம் வெட்டூர்ணிமடத் தில் புதனன்று தொடங்கியது. இந்திய கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநிலக் குழுவின் தொழிற்சங்க வகுப்பு ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் வெட்டூர் ணிமடத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது. முதலாம் நாளான ஜூலை 22ஆம் தேதி நடந்த வகுப்பில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 120 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கட்டுமான தொழி லாளர் சங்க மாநிலத் தலைவர் கே.பி.பெருமாள் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பி.சி.சுரேஷ்குமார் வரவேற்றார். நிர்வாகிகள் ஆர்.ராதா, எம்.வேலம், கே.முத்துகிருஷ்ணன் ஜி.சகாய ஆண்டனி, எஸ்.ஜெயன் ஆகியோர் பேசினர். கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், மாநில சிறப்புத் தலை வர் ஆர்.சிங்காரவேலு, மாநில பொதுச் செயலாளர் டி.குமார், சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.தங்க மோகனன், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு, முன்னாள் எம்.பி., ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் எம்எல்ஏ ஆர்.லீமாரோஸ், சிஐடியு குமரி மாவட்ட செயலா ளர் எஸ். சி.ஸ்டாலின் தாஸ், பொருளாளர் ப.இந்திரா, மில் தொழிலாளர் சங்க பொதுச் செய லாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநில உதவி பொதுச் செயலாளர் வி.குமார் உரையாற்றினார். கட்டுமான சங்க மாநில துணைத் தலைவர் ஜே.ஆலிவர் பிரைட் நன்றி கூறினார். ஜூலை 23ஆம் தேதி இரண்டாவது நாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது.</p>
