முந்தய பக்கம்

உதகையில் அனுமதியின்றி கட்டடப்பணி: ‘சீல்’

8 Jan 2026, 2:44 pm
உதகையில் அனுமதியின்றி கட்டடப்பணி: ‘சீல்’
<p><strong>உதகையில் அனுமதியின்றி கட்டடப்பணி: &lsquo;சீல்&rsquo;</strong></p> <p>உதகை, ஜன.8- உதகையில் முறை யான அனுமதியின்றி கட்டப்பட்ட இரு கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் வீடுகள் கட்ட அனுமதி பெற்று தங்கும் விடுதிகளாக செயல்பட்டு வரும் கட்டடங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவின் படி சீல் வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீடுகள் கட்ட அனுமதி பெற்று தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன. இதுதொடர்பாக உதகை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்த நிலையில், நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முறையான அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து இரு கட்டடங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram