சிபிஎம் தொடர் போராட்டத்தால் பருத்திருச்சேரி பாலம் கட்டுமானப் பணி துவங்கியது
17 Feb 2026, 3:36 pm
<p><strong>சிபிஎம் தொடர் போராட்டத்தால் பருத்திருச்சேரி பாலம் கட்டுமானப் பணி துவங்கியது </strong></p>
<p>கும்பகோணம், பிப்.17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பருத்திச்சேரி-குடவாசல் இடையே குடமுருட்டி ஆறு உள்ளது. மரப்பாலங்கள் மூலம் மக்கள் ஆற்றை கடந்து வருகின்ற னர். ஆற்றில் தண்ணீர் செல்லும் காலத்தில் அச்சத்துடன் பொதுமக்கள், மாணவர்கள் செல்லும் அவல நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்காலிக மரபாலத்தை அகற்றிவிட்டு, பொதுமக்கள் நலன் கருதி கான்கிரீட் பாலம் அமைத்திட வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில், கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சாலை மறியல், கவன ஈர்ப்பு போராட்டம், ஆற்றில் இறங்கி போராட்டம், காத்திருப்பு போராட்டம் என பலவகை போராட்டத்தை நடத்தியது. அப்போது அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எழுத்துப்பூர்வமாக விரைவில் பாலம் அமைப்பதாக தெரிவித்திருந்தனர். தொடர்ந்து சிபிஎம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியக் குழு தொடர்ந்து அதிகாரி களிடம் வலியுறுத்தியதன் பேரில், பருத்திச் சேரி-குடவாசல் இடையேயான குடமுருட்டி பாலம் கான்கிரீட் பாலமாக ரூ.3 கோடியே 71 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் கட்டு வதற்கான கட்டுமான பணி ஆணை வழங்கப்பட்டது. இத்தகைய சூழலில், பாலம் கட்டும் பணி யை திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் திங்களன்று துவக்கிவைத்தார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினர் பழனிவேல், திருவாரூர் மாவட்டக் குழு உறுப்பினர் லெட்சுமி கெரகொரியா, குட வாசல் ஒன்றியச் செயலாளர் லெனின், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய தோழர்கள் ரெங்கசாமி, வெங்கடேஷ், மணிவேல், தருமையன், பிரேம்நாத், முருகன் உள்ளிட்ட கீரனூர், பருத்திசேரி சிபிஎம் கட்சியினர் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள், தொடர்ந்து போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினருக்கு நன்றி தெரிவித்தனர். இதனால் மக்களுக்கான இயக்கமாக செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட நாள் போராட்டம் முடிவுக்கு வந்து பாலம் துவங்கும் பணி நடைபெற்று வருகிறது.</p>
