கல்லூரி அருகே பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணி: எம்எல்ஏ துவக்கி வைத்தார்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>கல்லூரி அருகே பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணி: எம்எல்ஏ துவக்கி வைத்தார்</strong></p>
<p>அரியலூர், டிச.3 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026-இன்கீழ், ஜெயங்கொண் டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில், ரூ.9 லட்சத்தில், புதிய பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணி, ஜெயங்கொண் டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரிக்கு ரூ.3 லட்சத்தில் தளவாட சாமான்கள் வழங்குதல், இறவாங்குடி ஊராட்சியில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் 2024-2025-இன்கீழ், ரூ.8.44 லட்சத் தில், இறவாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், புதிய வைப்பறையு டன் கூடிய சமையலறை கட்டிடம் ஆகிய வற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்தார். கடந்த நவ.20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்த ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டி டத்தை பார்வையிட்டார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் கஸ்தூரி (வ.ஊ), பிரபாகரன் (கி.ஊ), கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ராசமூர்த்தி, ஜெயங்கொண்டம் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் தன.சேகர் (வடக்கு), இரா.மணிமாறன் (மத்தியம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
