வேளச்சேரி சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!
28 Nov 2025, 2:28 pm
<p><strong>வேளச்சேரி சாலையில் புதிய பாலம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!</strong></p>
<p>சென்னை, நவ.28- சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்த வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சி மூலம் புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. வேளச்சேரி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரையில் 3 கிலோ மீட்டர் நீளத்திறகு புதிய பாலம் கட்டப்படும் என்று மாநகராட்சி அறி வித்தது. இதற்கான ஒப்பந்தம் ஜூலை வெளியிடப்பட்டது. இந்த பாலம் கிண்டி ஆளுநர் மாளிகை அருகே உள்ள சர்தார் பட்டேல் சாலையில் தொடங்கி குருநானக் கல்லூரி வரையில் 100 அடி சாலையில் முடியும் வரையில் கட்ட முடிவு திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.310 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள இந்தப்பால பணிகளை செய்ய ஒப்பந்தம் கோரும் பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் பாலம் அமைக்கும் பணியை தற்காலிமாக நிறுத்தி வைக்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளது. “தாம்பரத்தில் இருந்து மேடவாக்கம், பள்ளிக்கரணை வழியாக வேளச்சேரிக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த வழித்தடம் 100 அடி சாலை குருநானக் கல்லூரி அருகே ஐந்து பர்லாங் சாலை வழியாகவும் அமைய உள்ளது. இதே வழியில் மாநகராட்சி அமைக்கும் பாலமும் வருகிறது. மெட்ரோ ரயில் வழித்தடம் உயர்மட்ட பாதையில் அமைய இருப்பதால், அதற்கேற்றார் பாலத்தை வடிவமைக்க வேண்டி இருக்கிறது. எனவே, வேளச்சேரி புதிய பாலம் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. தாம்பரம் - வேளச்சேரி மெட்ரோ ரயில் திட்டம் முடிவடைய நீண்டகாலம் எடுக்கும் என்பதால், அதற்கான வரைபடத்தை விரைந்து தயாரித்து வழங்குமாறு கேட்டுள்ளோம். மெட்ரோ ரயில் நிறு வனம் வரைபடம் வரையும் பணிகளை முடித்து விரைந்து ஒப்படைத்தால் ஏற்கெனவே, திட்டமிட்டபடி ஜனவரியில் பாலப்பணிகளை தொடங்குவோம். இல்லையென்றால் காலதாமதமாகும்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
