தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதி விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த அரசியலமைப்பில் 5வது பிரிவு அவசியம் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்

4 hours before
நீதி விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த அரசியலமைப்பில் 5வது பிரிவு அவசியம்  தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்
<p><strong>நீதி விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த அரசியலமைப்பில் 5வது பிரிவு அவசியம் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் டாக்டர் வீ. ராமராஜ்</strong></p><p>சேலம், ஜூலை 26- சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரி யில், “மருத்துவர்கள் மீதான புகார் களை விசாரிப்பதற்கு சிறப்பு தீர்ப்பா யம் அமைக்கப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான கொள்கை வரைவு போட்டி நடை பெற்றது. கல்லூரித் தலைவர் டி. சரவ ணன் தலைமையில் நடைபெற்ற பரி சளிப்பு மற்றும் போட்டி நிறைவு விழா வில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப் பினர் டாக்டர் வீ. ராமராஜ் மற்றும் மருத்து வர் டாக்டர் எம். அருள் பிச்சை நாரா யணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர். விழாவில் டாக்டர் வீ. ராமராஜ் பேசியதாவது: மருத்துவ அலட்சி யத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரும் வழக்குகளை நுகர் வோர் நீதிமன்றத்திலும், தண்டனை கோரும் வழக்குகளை குற்றவியல் நீதி மன்றத்திலும், தொழில்முறை ஒழுங்கு நடவடிக்கை கோரும் புகார்களை மாநில மருத்துவக் கவுன்சில்கள் மற்றும் தேசிய மருத்துவ ஆணை யத்திலும் தொடர வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரே பிரச்சினைக் காக பல்வேறு அமைப்புகளை அணுக வேண்டிய சிக்கல் பாதிக்கப்பட்ட வர்களுக்கும், அதேபோல் பல்வேறு அமைப்புகளில் தாங்கள் தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய நிலை மருத்துவர்களுக்கும் ஏற்படுகிறது. மருத்துவ அலட்சியம், தொழில் முறை தவறான நடத்தை, நோயாளி களுக்கான இழப்பீடு மற்றும் தொடர்பு டைய அனைத்து விவகாரங்களையும் ஒருங்கிணைந்து விசாரிக்கக்கூடிய ‘மருத்துவத் தீர்ப்பாயம் தேவையா? என்பது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரி சீலனை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இத்தகைய கொள்கை வரைவு போட்டிகள் நடத்தப்படுவது வர வேற்கத்தக்கது என்றும், சட்டக் கல்லூரி களில் இதுபோன்ற சட்ட விவாதங்கள் நடைபெறுவது மக்கள் நலச் சட்டங் களை உருவாக்குவதற்கும் மாணவர் களின் சிந்தனைத் திறனை மேம்படுத்து வதற்கும் பெரிதும் உதவும் என்றும் வீ. ராமராஜ் தெரிவித்தார். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு உருவான அதிகாரப் பிரிவினைக் கோட்பாட்டின்படி, சட்டமன்றம், நிர்வா கம், நீதித்துறை ஆகிய மூன்று பிரிவு களே அரசின் அடிப்படை அமைப்பு களாக பல நாடுகளின் அரசியலமைப் புகளில் இடம்பெற்றுள்ளன என்றார். ஆனால், மக்களாட்சியின் அடித்தள மாக விளங்கும் தேர்தல்களை நடத்தும் தேர்தல் மேலாண்மை அமைப்புக ளுக்கு அரசின் நான்காவது பிரிவு என்ற அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வீ. ராமராஜ் வலி யுறுத்தினார். கடந்த ஐம்பது ஆண்டுகளில் மனித உரிமை ஆணையங்கள், குழந்தைகள் உரிமைகள் ஆணையங்கள், தகவல் ஆணையங்கள், லோக்பால், லோக் ஆயுக்தா போன்ற ஊழல் விசாரணை அமைப்புகள், பல்வேறு தீர்ப்பாயங் கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் இசைவுத் தீர்வு, சமரசத் தீர்வு போன்ற மாற்று நீதி அமைப்புகள் உருவாகியுள்ளன. இவ்வமைப்புகள் அனைத்தும் நீதித்துறைக்கு வெளியே செயல்பட்டாலும், நீதி வழங்கும் அதிகா ரம் கொண்ட எந்த அமைப்பும் நீதித் துறையின் அரசியலமைப்புச் சட்டக் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதால், நீதித்துறைக்கு வெளியே செயல்படும் விசாரணை மற்றும் தீர்ப்பாய அமைப்புகளை ஒருங்கி ணைத்து கண்காணிக்கும் வகையில் அரசியலமைப்பில் அரசின் ஐந்தாவது பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.