தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை கொல்ல சதி

12 Mar 2026, 4:20 pm
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை கொல்ல சதி
<p><strong>ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை கொல்ல சதி</strong></p> <p>ஜம்மு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல மைச்சரும், &lsquo;இந்தியா&rsquo; கூட்டணி யில் அங்கம் வகிக்கும் தேசிய மாநா ட்டுக் கட்சியின் மூத்த தலைவருமான பரூக் அப்துல்லா (88) மீது துப்பாக்கிச் சூடு மூலம் கொலை முயற்சி நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. &nbsp;தற்போதைய ஜம்மு-காஷ்மீர் முதல மைச்சரான உமர் அப்துல்லாவின் தந்தை &nbsp;பரூக் அப்துல்லா இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். துப்பாக்கியால் சுட்ட கமல் சிங் ஜம்வாலை (63) பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தி லேயே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ஜம்முவின் பழைய மண்டி பகுதியைச் சேர்ந்த கமல் சிங் ஜம்வால்,&ldquo;கடந்த 20 ஆண்டுகளாக பரூக் அப்துல்லாவைத் தாக்கும் வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்&rdquo; என காவல்துறை விசாரணையில் வாக்கு மூலம் அளித்துள்ளார். ஆனால் என்ன கார ணத்திற்காக அவர் தாக்குதல் நடத்தினார் என்பது தொடர்பாக செய்திகள் வெளி யாகியுள்ளன. குறிப்பாக, பரூக் அப்துல்லாவிற்கு தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) அடங்கிய &lsquo;இசட் பிளஸ் (Z +)&rsquo; பாதுகாப்பு உள்ளது. இது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஆகும். எனினும் இந்த பாது காப்பை மீறி பரூக் அப்துல்லாவை கொல்ல &nbsp;சதி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ள நிலையில், கடவுள் என்னைக் &nbsp;காப்பாற்றினார். நான் நலமாக இருக்கிறேன் என வியாழனன்று காலை பிடிஐ செய்தியாள ரிடம் பரூக் அப்துல்லா கூறினார். &nbsp;கேரள முதலமைச்சர் கடும் கண்டனம் பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சிக்கு நாடு முழுவதும் கடும் கண்ட னம் கிளம்பியுள்ள நிலையில், கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், &ldquo;முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் டாக்டர் பரூக் அப்துல்லா மீதான கொலை முயற்சி குறித்து கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தும், இத்தகைய பாதுகாப்பு குறைபாடு ஏற் பட்டது மிகுந்த கவலைக்குரிய விஷயம். &nbsp;இந்தச் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு &nbsp;அதிகாரிகளிடமிருந்து உடனடி பதில்க ளைக் கோரும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. நாங்கள் பரூக் அப்துல்லா விடம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உறுதுணையாக நிற்கிறோம். இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு நமது ஜனநா யகத்தில் இடமில்லை. அவர் நல்ல ஆரோக் கியத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வாழ்த்துகிறேன்&rdquo; என அவர் தெரிவித்துள் ளார். &nbsp;மு.க.ஸ்டாலின் அதே போல தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில்,&ldquo;மதிப்பிற்குரிய டாக்டர் பரூக் அப்துல்லா அவர்கள் மீதான கொலை முயற்சியை வன் மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இத்தகைய வன்முறைச் செயல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. அவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்பதை அறிந்து நிம்மதி அடை கிறேன்&rdquo; என கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.