முந்தய பக்கம்

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்விட்ட காங்கிரசார் கைது!

23 Jan 2026, 5:49 pm
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்விட்ட காங்கிரசார் கைது!
<p><strong>மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்விட்ட காங்கிரசார் கைது!</strong></p> <p>மதுராந்தகம், ஜன. 23- செங்ல்ட்டு மாவட்டம், மதுராந்கத்தில் நடை பெற்ற தேசிய ஜன நாயக கூட்டணியின் பொதுக் &nbsp;கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றம் செய்து, காந்தியின் பெயரை எடுக்கப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழனன்று (ஜன.22) இரவு மதுராந்த கத்தில் முன்னாள் காஞ்சி புரம் எம்.பி. விஸ்வநாதன் தலைமையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடை பெற்றது. இதில், அக்கட்சி யினர் ஏராளமானோர் கலந்து கொண்டு காந்தி பெயரை நீக்கிய பிரதமர் தமிழ்நாட்டுக்கு வராதே என கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில், வெள்ளியன்று (ஜன.23) பிரதமர் மோடி ஹெலி காப்டரில் மதுராந்தகம் வந்து போது, கைது செய்து வைக்கப்பட்டிருந்த மண்ட பத்தின் மாடியிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் தேசிய செயலாளர் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலை மையில் கறுப்பு பலூன் பறக்க விட்டு மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram