தீக்கதிர் முக்கிய செய்திகள்
29 Nov 2025, 4:58 pm

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது

பாஜக முதலில் மகாராஷ்டிர பெண்களை ஏமாற்றியது. பிறகு தில்லி பெண்கள். மோடி வாக்குறுதி கொடுத்த 2,500 ரூபாய்க்காக இன்னும் அவர்கள் காத்திருக்கிறார்கள். இப்போது பீகார். வாக்குறுதி அளித்த 10,000 ரூபாயை பீகார் பெண்களுக்கு தர பாஜகவினர் மறுக்கின்றனர்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

இரண்டாவது காலாண்டில் 8.2 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்று பெருமையாக கூறுகிறார்கள். ஆனால் அமெரிக்க வரிகள் மற்றும் வேலையின்மை, நிதி பற்றாக்குறை விரிவடைதல் போன்ற பிற பொருளாதார சவால்களை பற்றி பேசவில்லை. இது ஏன்?

மேற்கு வங்க அமைச்சர் சித்திக்ஹுல்லா

எஸ்ஐஆர் செயல்முறை முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை. அதே போல பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்களிலும் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. குறைபாடுள்ள மற்றும் சர்ச்சைக்குரிய இந்த எஸ்ஐஆர் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேற்பார்வையால் மட்டுமே நடத்தப்படுகிறது. எஸ்ஐஆர் தேர்தல் ஆணையத்தின் கையில் பெயரளவில் மட்டுமே உள்ளது.

ஆர்ஜேடி மூத்த தலைவர் லால் மண்டல்

பீகாரில் மாயாஜாலம் போன்று சந்தேகத்திற்குரிய வகையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல் முடிவுகள் மோசடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. பணபலமும் ஒரு முக்கிய காரணம். பீகார் தேர்தல் மோசடிக்கு, தேர்தல் ஆணையமே முழுபொறுப்பு.