முந்தய பக்கம்

காங்கிரஸின் மென்மையான சங் பரிவார அணுகுமுறை!

1 Jul 2026, 9:38 pm
காங்கிரஸின் மென்மையான சங் பரிவார அணுகுமுறை!
<p><strong>காங்கிரஸின் மென்மையான சங் பரிவார அணுகுமுறை!</strong> </p><p>கேரளாவில் ‘லைஃப் மிஷன்’ திட்டத்தின் கீழ் வீடில்லாத ஏழைகளுக்குப் பினராயி விஜயன் தலைமையிலான முந்தைய இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசு ஏராளமான வீடுகளைக் கட்டிக் கொடுத்தது. மாநில அரசின் பெரும்பகுதி நிதிப் பங்களிப்புடன் கட்டப்பட்ட இந்த வீடுகளில், பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்தித்தபோது, பினராயி அரசு அதனைத் தீர்க்கமாக நிராகரித்தது. </p><p>ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, எல்.டி.எப் அரசால் கட்டப்பட்ட வீடுகளை மக்களுக்கு விநியோகிக்கும்போது மோடி படம் வைக்க அனுமதி தந்துள்ளது. “இதில் என்ன தவறு?” என்று காங்கிரஸ் அமைச்சர்கள் கேட்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்டோபஸிடம் மென்மை காட்டினால் அது தனது கொடூர குணத்தை மாற்றிக் கொள்ளாது என்பது காங்கிரசாருக்குப் புரியவில்லை. இது கேரள சமூகத்திற்கு நல்லதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram