முந்தய பக்கம்

விளம்பரமே முக்கியம் பிரதமர் மோடியை சாடும் காங்கிரஸ்

20 Jun 2026, 9:37 pm
விளம்பரமே முக்கியம் பிரதமர் மோடியை சாடும் காங்கிரஸ்
<p><strong>விளம்பரமே முக்கியம் பிரதமர் மோடியை சாடும் காங்கிரஸ்</strong></p><p>அமெரிக்கத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் படு கொலை செய்யப்பட்ட விவகா ரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடன் பேசாத பிரதமர் மோடியைக் காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. ஒன்றிய அரசுக்கு ‘நாடு முதலிடம்’ அல்ல, ‘விளம்ப ரமே முதலிடம்’ என்பதே தாரக மந்திரமாக உள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட போதி லும், டிரம்ப் அதற்காக வருத்தம்கூடத் தெரி விக்கவில்லை. பிரதமர் மோடி வெறும் புகழ்ச்சிகளை மட்டும் கேட்டுக்கொண்டு, இந்த கொலை குறித்து டிரம்பிடம் ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. இந்திய வெளி யுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெ ரிக்க அதிகாரியால் கண்டிக்கப்பட்டுத் திரும்பு கிறார். பிரதமர் மோடியோ தனது தோற்றத் தைப் பற்றிய புகழ்ச்சியைக் கேட்டுவிட்டுத் திரும்புகிறார். உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் தலைவர்கள் சர்வதேச அரங்கில் இப்படி அவமானப்படுவதைப் பார்ப் பது மனவேதனை அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram