பீகாரில் முக்கிய தலைவர்களை நீக்கிய காங்கிரஸ்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>பீகாரில் முக்கிய தலைவர்களை நீக்கிய காங்கிரஸ் </strong></p>
<p>சமீபத்தில் நிறைவு பெற்ற பீகார் சட்ட மன்றத் தேர்தலில் தேசிய ஜனநாய கக் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்தத் தேர்தல் தொடர் பாக காங்கிரஸ் உயர்மட்ட கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற் றது. இந்த கூட்டத்தில் பீகார் மாநில காங்கி ரஸ் மூத்த தலைவர்கள் 7 பேரை 6 ஆண்டு களுக்கு கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் சேவா தளத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஆதித்ய பஸ்வான், பீகார் முன்னாள் துணைத் தலைவர் ஷகி லுர் ரஹ்மான், விவசாய பிரிவு முன்னாள் தலைவர் ராஜ்குமார் சர்மா, இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராஜ்குமார் ராஜன், பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் முன்னாள் தலைவர் குந்தன் குப்தா மற்றும் 2 மாவட்ட அளவிலான தலைவர்கள் என 7 பேர் மீது காங்கிரஸ் கட்சி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.</p>
